Jailer: மேத்யூவாக மோகன்லால்.. கூஸ்பம்ஸ் கன்பார்ம்: 'ஜெயிலர்' படம் குறித்த சூப்பரான தகவல்.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தப்படம் துவங்கும் போது இருந்த எதிர்பார்ப்பினை விட தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் ‘ஜெயிலர்’ ரிலீசை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ஜெயிலரில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப்படம் உருவாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. இதனால் இந்த முறை மிஸ் ஆகக்கூடாது என ‘ஜெயிலர்’ படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அத்துடன் இந்தப்படத்தில் பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் நடித்துள்ளனர். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள பிரபல மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப், தெலுங்கு சினிமாவை சார்ந்த சுனில் என பலர் நடித்துள்ளனர். இதனால் ‘ஜெயிலர்’ மல்டி ஸ்டார் படமோ என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. ஆனால் ‘ஜெயிலர்’ மல்டி ஸ்டார் படம் கிடையாது. இவர்கள் எல்லாம் கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார் நெல்சன்.

இந்நிலையில் அண்மையில் ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லான்ச் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் கலந்துக்கொண்ட நிலையில் மோகன்லால் பங்கேற்கவில்லை. மேலும் ‘ஜெயிலர்’ டிரெய்லரிலும் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா ஆகியோரை நெல்சன் காண்பிக்கவில்லை. இதனால் படத்தில் இவர்களின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Rajinikanth: ‘தலைவர் 170’ பட டைட்டில் இதுவா.?: பயங்கரமா இருக்கே..!

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்து பேட்டி ஒன்றில் மோகன்லால் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, ‘ஜெயிலர்’ படம் சூப்பராக வந்துள்ளது. மேத்யூ எனும் கதாபாத்திரத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளேன். அந்த சீன் படத்தில் வரும் போது கொண்டாடுவீங்க. அது என்ன சீன்னு இப்பவே சொல்லிட்டா நல்லாருக்காது என தெரிவித்துள்ளார். மோகன்லால் பகிர்ந்துள்ள இந்த தகவல் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படம் நெல்சன் ஸ்டைலில் டார்க் காமெடியும், ரஜினியின் அதிரடி ஆக்ஷனும் இணைந்து உருவாகியுள்ளது டிரெய்லர் மூலமாக கன்பார்ம் ஆகியுள்ளது. மேலும், வரும் 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக ‘ஜெயிலர்’ படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thangalaan: ‘தங்கலான்’ படத்திற்காக புதிய அவதாரம்: ஆரத்தியாக மிரள விடும் மாளவிகா மோகனன்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.