புதுடில்லி, மத்திய அரசின் செயலராக இருந்த அருண் கோயல், 2022 நவ., 18-ல் விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே, அவர் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த மார்ச்சில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ‘பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அறிவுறுத்தலின்படி, தேர்தல் கமிஷனர்கள், தலைமை தேர்தல் கமிஷனரை, ஜனாதிபதி நியமனம் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது.
இதற்கிடையே, தேர்தல் கமிஷனராக அருண் கோயல் நியமனத்தை எதிர்த்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கில், அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே தீர்ப்பு அளித்து விட்டதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement