ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வாரம் திரையில் வெளியாகவுள்ளது. ஜெயிலர் திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும், தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார் ரஜினி.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் கொடுத்த நம்பிக்கையில் ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். லைக்காவின் தயாரிப்பில் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றார் ரஜினி. இதைத்தொடர்ந்து ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷின் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினி அடுத்தடுத்து நடிக்க இருக்கின்றார்.
ரஜினியின் தலைவர் 170
இதில் ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 170 திரைப்படம் ரஜினியின் படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என தகவல்கள் வருகின்றன. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது.
Ajith: சூப்பர்ஸ்டார் இடத்தை அடைய நான் ஆசைப்பட்டேன்..ஆனால்..வெளிப்படையாக பேசிய அஜித்..!
மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் மற்றும் நானி நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. ஜெயிலர் படத்தை தொடர்ந்து இப்படமும் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும் என எதிர்பார்ப்படுகின்றது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக தலைவர் 170 திரைப்படத்தில் ஃபஹத் பாசில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்து வரும் ஃபஹத் பாசிலின் நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியானது.
வில்லனாக ஃபஹத் பாசில்
இப்படத்தில் ரத்னவேலு என்ற நெகட்டிவ் ரோலில் நடித்த ஃபஹத் பாசிலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரை இந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடியதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சர்யத்தில் இருந்தது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதைத்தொடர்ந்து தற்போது ஃபஹத் பாசில் ரஜினியின் தலைவர் 170 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தலைவர் 170 படத்தில் மிரட்டலான வில்லனாக ஃபஹத் பாசில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது