தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா அடுத்த ஓராண்டிற்கும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் பிரம்மாண்ட ஏற்பாட்டை செய்திருந்தனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
மு.க.அழகிரியும், ஸ்டாலினும் பேசி கொண்டார்கள்
மாரத்தான் அமைச்சர் மா.சு
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர்
, மாரத்தான் அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்று புகழாரம் சூட்டினார். இவரது அப்பா பெயர் மாணிக்கம் என்பதால் மா.சுப்பிரமணியன் எனவும், அதுவே மா.சு என்று சுருங்கிப் போனதாகவும் தெரிவித்தார். மா.சு ஓடும் அளவிற்கு எங்களில் யாராலும் ஓட முடியாது. ஏன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான் எனக் குறிப்பிட்டார்.
தமிழக அரசு திட்டங்கள்
சென்னை மாநகராட்சி மேயராக சிறப்பான செயல்பாடுகள், கொரோனா காலகட்டத்தில் பதவியேற்று திறம்பட மேற்கொள்ளப்பட்ட பணிகள், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்கள், பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்திகள், மனநல முகாம்கள், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என அமைச்சர் மா.சு செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் லிஸ்ட் போட்டுக் கொண்டே சென்றார்.
கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்
இன்று நடந்த மாரத்தான் போட்டியில் 50 ஆயிரத்து 629 ஆண்களும், 21 ஆயிரத்து 514 பெண்களும், திருநங்கைகள், திருநம்பிகள் 1063 பேரும், அரசு உயர் அதிகாரிகள், அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் என 500க்கும் மேற்பட்டோரும், கடலோர காவல்படை, இராணுவ வீர்கள் 1500 பேரும் பங்கேற்று ஓடினர். இந்த ஆண்டுக்கான மாரத்தானில், 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
இது ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், தம்பி
விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து அந்த துறை பல மடங்கு எழுச்சி பெற்றுள்ளது.
புகழ்பெறும் தமிழகம்
உலகப் புகழ் பெற்ற போட்டிகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. ஏற்கனவே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தினோம். தற்போது ஹாக்கி போட்டியை நடத்தி கொண்டிருக்கிறோம். இதுபோல் பல போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
கருணாநிதியின் கனவு
மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கிறோம். புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்க இது பயன்படும். அனைத்திலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி விரும்பினார். அந்த எண்ணம் இன்று ஈடேறிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.