![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691300172_NTLRG_20230805164607368645.jpg)
விக்ரம் 62வது படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?
ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் '2018' . இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது. இதையடுத்து ஜூயிட் ஆண்டனி ஜோசப் மலையாளத்தில் நடிகர் ஆசிப் அலியை வைத்து விரைவில் புதிய படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தமிழில் ஒரு புதிய படத்தை ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதில் ஹீரோவாக நடிகர் விக்ரம் நடிக்கிறார். இது விக்ரமின் 62வது படமாக உருவாகிறது. இந்த நிலையில் விக்ரம் உடன் இணைந்து நடிக்க விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.