அரசு பள்ளிகளில் இத்தனை இடங்கள் காலி… HM டூ DEO புரமோஷன்… வந்தது புதிய சிக்கல்!

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள் (Headmasters) போதிய பணி அனுபவம் பெற்றிருந்தால் மாவட்ட கல்வி அதிகாரிகளாக (DEO – District Education Officers) பதவி உயர்வு பெறுவர். இதற்காக தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு அதிலிருந்து காலியிடங்களுக்கு ஏற்ப அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர்.

புதிய கல்வி கொள்கைஇதற்கிடையில் புதிய கல்வி கொள்கை 2020ன் படி, கிரேடு 2 ஆசிரியர்கள் – பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களாக மற்றும் அதற்கும் மேல் படிநிலைக்கு பதவி உயர்வு பெற தகுதி தேர்வு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதிதாக ஆசிரியர் பணியில் சேருவோருக்கு தகுதி தேர்வு வைப்பதில் தவறில்லை.​தகுதி தேர்வு கட்டாயம்ஆனால் பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு என்பதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் வரை சென்று முறையிட்டனர். ஆசிரியர் சங்கங்கள் பலவும் வழக்குகள் தொடர்ந்தன. இந்த விஷயத்தில் தகுதி தேர்வை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
​மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வுஇந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 46 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக சமீபத்தில் பதவி உயர்வு பெற்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகி உள்ளன. இவற்றை விரைவாக நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை தள்ளப்பட்டுள்ளது.
​காலிப் பணியிடங்கள்இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.அருளானந்தம், தமிழகத்தில் தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமாக எடுத்துக் கொண்டால் 1,500 முதல் 2,000 தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இருக்கின்றன.
​தலைமை ஆசிரியர்கள் அவசியம்குறிப்பாக மேல்நிலைப் பள்ளிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் 670 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர் தான் மிகவும் முக்கியமானவர். அவர் இல்லையெனில் நிர்வாகத்தை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும்.
​மாத சம்பளம் டூ வருகை பதிவேடுஉதாரணமாக ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதற்கான ஒப்புதல், மாணவர்களின் ஊக்கத்தொகை சார்ந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல், ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பிற கல்வி சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை தலைமை ஆசிரியர் தான் கவனிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் இல்லாத பட்சத்தில் பொறுப்பு அல்லது துணை தலைமை ஆசிரியர் பொறுப்பை கவனிப்பார்.
உடனடியாக நிரப்ப கோரிக்கைஆனால் இவர்களால் முழுமையாக செயல்படுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது திறம்பட செயல்பட முடியாது. எனவே தலைமை ஆசிரியர் பொறுப்பை கட்டாயம் நிரப்ப வேண்டியது அவசியமாகிறது என்று கூறினார். மேற்குறிப்பிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று கல்வியாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.