இருபது வருடங்களுக்குப் பின்னர் உடவலவ நீர்த் தேக்கத்தின் நீரேந்துப் பிரதேசங்களுக்கு செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
கடும் வரட்சிக் காலநிலை காரணமாக உடவலவ நீர்த் தேக்கததில் மேலும் நீரை வழங்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உடவலவ நீர்த் தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியிலாளர், சுஜீவ குணசேகர தெரிவித்தார்.
இரத்தினபுரி, மொனராகலை மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் குடிநீர் மற்றும் விவசாய செயற்பாடுகளுக்காக உடவலவ நீர்த் தேக்கத்திலிருந்தே பிரதானமாக நீர் வழங்கப்படுகிறது.
உடவலவ நீர்த்தேக்கத்தில் 217,440 அடி ஏக்கர் பரப்பில் பூரண நீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. 25,300 ஹெக்டயர் விவசாய நிலத்திற்கு 36,600 விவசாயக் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் ஊடாக நீர் விநியோகிக்கப்படுகின்றது.
தற்போது நீர்த் தேக்கத்தின் வாண் கதவை அண்மித்த பிரதேசங்களில் நீர் முழுமையாக வற்றிவிட்டது.
இந்நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை 1% வரை குறைவடைந்துள்ளதுடன், விவசாயிகள் குடி நீரைப் பெற்றுக் கொள்ளும் சாதாரண மக்கள் என உடவலவ தேசிய பூங்காவின் பிராணிகள் தற்போது வரை பாரிய நீர்ப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.