நிவின்பாலி படமா? விக்ரம் படமா? குழப்பத்தில் 2018 இயக்குனர்

கடந்த மே மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல் கேரளாவையே உலுக்கிய பெரும் மழை வெள்ளம், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதங்கள், மீட்பு பணி, அதிலிருந்து மக்கள் தங்களை மீட்டு எடுத்தது என இந்த படத்தை அந்த நிகழ்வு நடந்த காலகட்டத்திலேயே நாமும் இருப்பது போல உணரும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். அதனாலயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கிட்டத்தட்ட 200 கோடி வசூல் என்கிற மாபெரும் இலக்கை எட்டியது. இதற்கு முன்பாக மூன்று படங்களை இவர் இயக்கியிருந்தாலும் இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இவரது மார்க்கெட் கமர்ஷியலாக உயர்ந்தது.

இதனை தொடர்ந்து பிரபலமான லைக்கா நிறுவனம் இவரது டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க ஒப்பந்தமும் போட்டது. அந்த படத்தில் விக்ரம் நடிப்பதாகவும் மற்றும் விஜய்சேதுபதி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் இடம் பெற உள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் லைக்காவுடன் அவர் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே பல பேட்டிகளில் அடுத்ததாக நிவின்பாலி நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக கூறிவந்தார். இவர் இயக்குனரான அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்து இவருக்கு கை கொடுத்தவர் நிவின்பாலி தான். இந்த நிலையில் இவர் முதலில் நிவின்பாலி படத்தை இயக்க உள்ளாரா அல்லது விக்ரம் படத்தை இயக்க இருக்கிறாரா என்கிற விஷயம் தற்போது வரை சஸ்பென்ஸாகவே உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.