ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லால் சலாம்’. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றது. ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் ‘லால் சலாம்’ படம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷின் ‘3’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் இய்க்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப்படத்தை தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். அதன்பிறகு டைரக்ஷனில் இருந்து முழுவமாக விலகியிருந்த ஐஸ்வர்யா, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்கத்திற்கு திரும்பினார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
டைரக்ஷன் பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘முசாபிர்’ என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். அதனை தொடர்ந்து ‘லால் சலாம்’ படத்தை இயக்க ஆரம்பித்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப்படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவ முக்கியமான காரணமாக ரஜினியை சொல்லலாம். ஏனென்றால் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் இந்தப்படத்தில் முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கான லுக்கில் மிரட்டினார் ரஜினி.
Jailer: ரிலீசுக்கு முன்பே வசூலை குவிக்கும் ‘ஜெயிலர்’: மாஸ் காட்டும் முத்துவேல் பாண்டியன்.!
மேலும், ‘லால் சலாம்’ படப்பிடிப்பு சென்னை, மும்பை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்தப்படம் தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கடந்த நான்கு மாதங்களாக எங்கள் குழுவினர் மிகவும் கடினமாக உழைத்து இந்த படப்பிடிப்பை முடித்துள்ளோம்.
View this post on InstagramA post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)
கடைசி 22 மணி நேரங்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். என்னுடைய ‘லால் சலாம்’ குடும்பத்திற்கு நன்றி. திருவண்ணாமலையில் துவங்கிய படப்பிடிப்பு அதே இடத்தில் நிறைவடைந்தது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. எல்லாம் உங்களின் ஆசியால் தான். அடுத்தக்கட்ட பணிக்கு நாங்கள் செல்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sivakarthikeyan: ‘அயலான்’ படம் குறித்து தீயாய் பரவிய வதந்தி: வெளியான சூப்பர் அப்டேட்.!