ரஜோரி : ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்தா கவாஸ் கிராமத்தில், பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, நம் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை பல மணி நேரம் தொடர்ந்தது. இந்த சண்டை, இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவை தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டன.
இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெடிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் வாயிலாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement