Launch Date of iPhone 15: ஐபோன் 15 வெளியீடு மற்றும் விற்பனை தேதிகள் அறிவிப்பு!

இந்த முறையாவது மழை பெய்யுமா? சென்னை மக்கள் துக்கம் என்பது போல, இந்த முறையாவது அசத்தலான ஏகபோக ஃபீச்சர்களுடன் புதிய ஐபோன் மாடல் வெளியாகுமா? என்பதே ஆப்பிள் வாடிக்கையார்களின் எண்ணமாக உள்ளது. இந்த முறையாவது இந்த எதிர்பார்ப்பை ஆப்பிள் நிறைவேற்றுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த முறை ஆப்பிள் ஐபோன் 15ல் எதிர்பார்க்கப்படும் ஃபீச்சர்கள்…

1. அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலாண்ட்

2. ப்ரோ மாடல்களில் Periscope Zoom Lens

3. அதிவேகமான சார்ஜ் வசதியுடனான USB C போர்ட்

4. தரம் உயர்த்தப்பட்ட Telescope Lens

5. Silence Buttonக்கு மாற்றாக Customized Action Button

6. ஐபோன் ப்ரோ மாடல்களில் A17 Bionic chip

7. ஐபோன் ப்ரோ மாடல்களில் Ultra-thin bezels

வெளியீடு மற்றும் விற்பனை தேதி:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் இரு வாரங்களில் தனது புது பிராடக்ட்களை வெளியிடுவதை ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது. அதே போல இந்த ஆண்டும், செப்டம்பர் 12 அல்லது 13ம் தேதிகளில் புதிய ஆப்பிள் பிராடக்ட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவை விற்பனை தேதி செப்டம்பர் 21ம் தேதி துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது. 9to5Mac எனும் இணையத்தில் வெளியான தகவல் படி ஆப்பிள் ஐபோன் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஐபோன் 14 செப்டம்பர் 7ம் தேதி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சில முக்கிய ஃபீச்சர்கள்:
வெளியான ஐபோன் லீக்ஸ் தகவலில் ஐபோன் 15ல் எல்லா மாடல்களிலும் 48 மெகாபிக்ஸல் ரியர் கேமரா வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ப்ரோ மாடல்களில் Periscope Zoom Lens, 6x Zoom வசதியுடன் இடம்பெறலாம் என தகவல்கள் பரவி வருகிறது. நீண்ட காலமாக வரும் ஆனா வராது என இழுத்தடிக்கப்பட்டு வரும் USB-C போர்ட் இந்த மாடலில் நிச்சயமாக இடம்பெறும் எனவும் லீக்ஸ் தகவல்களில் கூறப்பட்டுள்ளன. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் டைட்டானியம் ஃப்ரேம் பாடி மற்றும் ஐபோன் 14-ஐ விட குறைந்த எடையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.