வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பதுடில்லி: ராகுலுக்கு மீண்டும் அரசு இல்லம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
‛மோடி’ சாதியினரை அவதூறாக பேசிய வழக்கில், சூரத் நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தீர்ப்பை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனையடுத்து ராகுலுக்கு மீண்டும் எம்.பி., பதவியை வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியதையடுத்து,
![]() |
தகுதி நீக்க உத்தரவை லோக்சபா செயலகம் ரத்து செய்ததையடுத்து இன்று பாரளுமன்ற லோக்சபா விவாத்தில் ராகுல் பங்கேற்றார்.
இந்நிலையில் ராகுல் எம்.பி.யாக இருந்த போது டில்லி துக்ளக் சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. தகுதி நீ்க்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசுபங்களாவை காலி செய்து வெளியேறினார். தற்போது மீண்டும் எம்.பி.யாக தொடர அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் அரசு பங்களா ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement