மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரும் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ், தூக்கம் பற்றிய தன் கருத்தை ஒரு பாட்காஸ்டில் பேசியுள்ளார். அதில் அவர் கூறிய கருத்துகள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகின்றன.
ஸெத் ரோகன் மற்றும் அவரின் மனைவி லாடன் மில்லர் ரோகனுடன், அன் கன்ஃப்யூஸ் மீ’ (Unconfuse Me) என்ற முதல் எபிஸோடில் பில்கேட்ஸ் பங்கேற்றார். அப்போது மூளையின் ஆரோக்கியம் பற்றிய விவாதத்தின்போது, பேசியுள்ளார் பில்கேட்ஸ்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_1501.jpeg)
அதில், “நாங்கள் இளம் வயதில் தூக்கம் பற்றி இப்படிதான் பேசிக்கொள்வோம். ஒரு நண்பர்: ஓ நான் ஆறு மணி நேரம் மட்டுமே தூங்குவேன். மற்றொரு நண்பர்: இல்லை நான் ஐந்து மணி நேரம் தூங்குவேன்… சில நேரங்களில் தூங்கவே மாட்டேன். மூன்றாவது நபர்: நானும் தூங்காமல் இருப்பேன்.”
என் (பில்கேட்ஸ்) மைண்ட் வாய்ஸ் : ஹ்ம்ம்ம், வாவ் அந்தத் தோழர்கள் மிகவும் நல்லவர்கள், அவர்களைப் போல நானும் இருக்க இன்னும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்” இப்படி தான் எங்கள் உரையாடல் இருக்கும்.
அந்தக் காலத்தில் தூக்கம் என்பது தேவையற்றது, அது மனிதனைச் சோம்பேறி ஆக்கும் என்றுதான் நினைத்தேன். தூங்காமல் இருக்க அதிகமாக காபி குடிப்பேன். அப்போது நான் வேலையில் வெறித்தனமாக இருந்ததால் தூக்கம் தேவையில்லை எனக் கருதினேன். ஆனால் பின்னாளில்தான் தூக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என புரிந்து கொண்டேன். என் தந்தை அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு 2020-ம் ஆண்டு இறந்தார்,
சரியான தூக்கம் இல்லாததும் இதுபோன்ற நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. இப்போதெல்லாம் நான் தூக்கத்தின் நீளம் மற்றும் தரத்தைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டேன். குறிப்பாக டீன் ஏஜ் வயதினர் நல்ல தூக்கத்தைப் பெறுவது மிகவும் முக்கியம். அது உடல் மற்றும் மன நலத்துக்கு மிகவும் அவசியமானது” என்று பேசியுள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/CC_2.jpg)
பில்கேட்ஸின் கருத்தை ஒப்புக்கொண்ட ரோகன், “நான் இளமையாக இருந்தபோது, `இனி இறந்தவுடன் நீ தூங்கு’ என்ற ஈவென்ட்டெல்லாம் நடந்தது. இப்போது இருக்கும் தலைமுறை இளைஞர்களுக்கு தூக்கமும் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. புகை உடலுக்குக் கெடுதல் என தெரிந்தும் ஃபேஷனுக்காக புகைக்கிறார்கள் அதே போல இரவில் தூங்காமல் படம் பார்ப்பது, கேம் விளையாடுவது, வெளியில் செல்வது எனத் தூங்காமல் இருப்பதையும் ஃபேஷனாக்கிவிட்டனர். இது மாற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.