பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்: தமிழக அரசு ‘நச்’ அறிவிப்பு!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள்களை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலைஞர்

பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.

அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 3ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி

ஆனால் இந்த கல்வி ஆண்டில் திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரு வாரங்கள் கழித்து தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனால் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.