மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தத்தமது பிரதேச செயலகப் பிரிவுகளில் பூர்த்தி செய்து கொள்ள முடியாத பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இலகுவான முறையில் தெரிவிப்பதற்கு மாவட்ட செயலகத்தினால் புதிய செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி. பத்மராஜாவின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக மாவட்ட செயலக தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் பொதுமக்களின் பிரச்சினைகள், முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதி மாவட்ட செயலக இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலக இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள இவ்வசதியினை அணுகுவதற்காக பொதுமக்கள் http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/ எனும் இணைப்பை பதிவதனால் இவ்வலைத்தளத்திற்குள் செல்லமுடியும்.
இங்கு தமது பிரதேச செயலகப் பிரிவுகளில் தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சினைகள், முறைப்பாடுகளை பதிவிடுவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.