வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுலுக்கு இந்தியா போன்ற ஒரு நாட்டினை வழி நடத்தும் திறன் உள்ளதா என்பது குறித்து காங்கிரஸ் எப்போதாவது யோசனை செய்திருக்கிறதா என பாஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
‘திமிர் கூட்டணி’
இது தொடர்பாக, ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சமூக நீதியைப் பேசும் அவர்கள், வாரிசு அரசியல், ஊழல் அரசியல் மூலமாக சமூக நீதியை மீறுகின்றனர் என்றும் வாரிசு அரசியல் மற்றும் ஊழலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். குடும்ப கட்சிகளின் ஆட்சி என்பது இயல்பாகவே ஜனநாயகமற்றது மற்றும் பொறுப்பற்றது.
நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் குடும்ப கட்சி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். ‘இந்தியா கூட்டணி’யை ‘திமிர் கூட்டணி’ என்று அழைக்கலாம். அதற்கு அவர்கள் முழுமையாக தகுதியானவர்கள். தலைவரின் மகன் அல்லது மகள் கட்சியின் தலைவராக வருவார் என்பது குடும்பக்கட்சிகள் பொருள்.
தலைவர் மட்டுமல்ல, அவர்கள் பிரதமர், முதல்வர் அல்லது பிரதமர் வேட்பாளராக வருவார். அவர்களின் திறனைப் பொருட்படுத்தாமல் முதல்வர் பதவி அளிக்கின்றனர். ஆனால், ராகுலுக்கு இந்தியா போன்ற ஒரு நாட்டினை வழி நடத்தும் திறன் உள்ளதா என்பது குறித்து காங்கிரஸ் எப்போதாவது யோசனை செய்திருக்கிறதா?. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement