கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் இருக்கும் எம்.வி. கல்லூரியில் தியேட்டர், சினிமா மற்றும் சமூகம் தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. செவ்வாய்க்கிழமை நடந்த அந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்ல
கல்லாரி மாணவர்கள் கலந்து கொள்ளாத அந்த நிகழ்ச்சி ஏன் கல்லூரியில் நடக்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். மேலும் பிரகாஷ் ராஜ் வருகையை எதிர்த்து கல்லூரி வளாகத்திற்கு வெளியே போராடினார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாரிகேட் வைத்து போராட்டக்காரர்கள் யாரும் கல்லூரிக்குள் நுழைந்துவிடாமல் தடுத்தார்கள். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் மாணவர்களும், வெளியாட்களும் அடக்கம். வெளியாட்களின் பின்னணி குறித்து தெரியவில்லை என்று ஷிவமோகா எஸ்.பி. தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரகாஷ் ராஜ் வந்து சென்ற இடத்தில் கோமியத்தை தெளித்து மாணவர்கள் சிலர் சுத்தம் செய்தார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கோமியம் கல்லூரிக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சியை ஏன் அங்கு நடத்தினார்கள் என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ். அவர் பாஜக, மத்திய அரசின் நடவடிக்கைகள், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்.#Justasking என்கிற ஹேஷ்டேகுடன் அவர் பல கேள்விகள் எழுப்பி வருகிறார்.
இதனால் பாஜகவினரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் காலையிலேயே வாக்களித்த பிரகாஷ் ராஜ், பார்த்து கவனமாக வாக்களிக்குமாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததை பார்த்தவர்களோ, நீங்கள் சொல்வது புரிகிறது, கண்டிப்பாக பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றார்கள்.
பாஜக அதிருப்தியில் இருக்கும் பிரகாஷ் ராஜ் சென்ற இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்தது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இப்படி செய்யலாமா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Vishal: நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்கிறாரா விஷால்?
யாராக இருந்தாலும் மரியாதை கொடுக்க கற்றுத் தரும் கல்வியை பயிலும் மாணவர்கள் ஒரு பிரபல நடிகர் வந்த இடத்தை சுத்தம் செய்திருப்பது வேதனைக்குரிய விஷயம். அவர்கள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்களாக தான் இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
மாணவர்கள் இப்படி செய்திருப்பதை பார்க்கவே எரிச்சலாக உள்ளது. நம் அடுத்த தலைமுறை எங்கே சென்று கொண்டிருக்கிறது?. நம் தேசத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியவர்கள் இப்படி பின்னோக்கி சென்றிருக்கிறார்கள்.
ஒரு மனிதர் மத்திய அரசை கேள்வி கேட்பதால் அவரை இப்படியா நடத்துவது?. பிரபலமாக இருப்பவருக்கே இந்த நிலைமையா என சமூக வலைதளவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.