இந்தியாவின் சாதனையை தட்டிப்பறிக்க பார்க்கிறதா ரஷ்யா? அவசர அவசரமாக நிலவுக்கு அனுப்பப்படும் லூனா 25!

நிலவின் தென் துருவத்துக்கு சந்திரயான் விண்கலத்தை இந்தியா அனுப்பியுள்ள நிலையில் அதற்கு போட்டியாக ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு லூனா 25 என்ற விண்கலத்தை அவசர அவசரமாக நாளை அனுப்பவுள்ளது.

சந்திரயான் 3இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.நிலவை நோக்கி பயணம்கடந்த 2019ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தோல்வியை தழுவிய நிலையில் அதன் மூலம் பெற்ற அனுபவங்களை கொண்டு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையை கடந்த 7 ஆம் தேதி நிறைவு செய்தது. இதனை தொடர்ந்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது சந்திரயான் 3 விண்கலம்.ஆகஸ்ட் 23 ஆம் தேதி
சந்திரயான் சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக குறைக்கப்பட்டு நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது. சசந்திரயான்-3 விண்கலத்தின் பணியை இஸ்ரோ தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சந்திரயான் 2 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் லூனா 25இந்நிலையில் ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பவுள்ளது. இந்தியாவின் சந்திரயான் -3 ஏவப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் வெள்ளிக்கிழமையான நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. லூனா-25 திட்டமானது ரஷ்யாவின் விண்வெளி தளமான வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் மூலம் கடந்த 2021 அக்டோபர் மாதமே திட்டமிடப்பட்டது.
​ 16 ஆம் தேதி முதல் ஆளுக்கு ரூ. 1 லட்சம்: சிறுபான்மையினர் வாக்குகளை அள்ள பலே பிளான்!​நாளை விண்ணில் ஏவப்படும் லூனா
ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விண்வெளித் தளமான வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து நாளை ஏவப்படும் லூனா -25 விண்கலம் நிலவுக்குச் செல்ல ஐந்து நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இந்தியாவுடன் போட்டிநிலவில் தரை இறங்குவதற்கு முன்பு லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை செலவிடும் என்றும் கூறப்படுகிறது. லூனா -25 விண்கலம், சந்திரயான் 3 விண்கலத்திற்கு முன்னதாக தரையிறங்கும் அல்லது ஒரே நேரத்தில் தரையிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மூத்த விஞ்ஞானியான டிவி வெங்கடேஸ்வரன், இந்தியாவுடன் போட்டி போட்டு ரஷ்யா லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்புகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
​ திருப்பதி பக்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தெற்கு ரயில்வே.. வார கடைசிலயா இப்படி நடக்கணும்?​டிவி வெங்கடேஸ்வரன்
அதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் நிலவுக்கு விண்கலத்தை செலுத்த முடியும் என்பதால் ரஷ்யா தற்போது தனது விண்கலத்தை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவிடம் உள்ளதை விடவும் பவர்ஃபுல் ராக்கெட்டுகள் ரஷ்யாவிடம் இருப்பதால், அவர்களால் விரைவில் நிலவை அடைய முடியும் என்றும் அதனால் சந்திரயான் 3 விண்கலத்திற்கு முன்பாகவே லூனா 25 நிலவில் தரையிறங்கலாம் என்றும் கூறியுள்ளார்.

குறுக்கிட வாய்ப்பு இல்லைமேலும் தென்துருவ பகுதி மிகப் பெரிய பகுதி என்பதால் ரஷ்யாவின் லூனா 25 விண்கலமும் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் மோதுவதற்கான வாய்ப்போ அல்லது சிக்னல் குறுக்கீடோ இருக்காது என்றும் டிவி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். நிலவில் குடியேறுவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் தென்துருவத்தில்தான் உள்ளது என்பதால், இஸ்ரேல் ஜப்பான் மற்றும் இந்தியா அங்கு ஆய்வு மேற்கொள்கிறது என்றும், ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
​ ஆபத்து… இந்தியாவுக்குள்ளும் என்ட்ரியான எரிஸ் வைரஸ்.. எங்கன்னு பாருங்க!​போட்டி இல்லைதற்போது இந்தியா மீண்டும் முயற்சி செய்வது போல் ரஷ்யாவும் தென் துருவ பகுதியை தேர்வு செய்திருப்பதாக கூறிய டிவி வெங்கடேஸ்வரன், ஏற்கனவே சீனா அங்கு சென்று விட்டதால் இதில் முதலில் யார் செல்வது என்ற போட்டி எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனிடையே சந்திராயன்-3 மற்றும் லூனா-25 பயணங்களில் பிரச்சனை இருக்காது என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.குழி தோண்டி ஆய்வுஇரண்டு விண்கலங்களும் தரையிறங்குவதற்கு வெவ்வேறு பகுதிகளை தேர்வு செய்திருப்பதால் அவற்றின் பயணங்களில் எந்த குறுக்கீடும் வராது என்றும் நிலவில் எல்லோருக்கும் இடம் உள்ளது என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் லூனா-25 நிலவின் தென் துருவத்தில் ஓர் ஆண்டுக்கு ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் 15 சென்டி மீட்டர் அளவுக்கு குழி தோண்டி மண் மாதிரிகளில் தண்ணீர் மூலக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
​ ரூ. 70000 கொடுத்து கல்யாணம்…நடத்தை சரியில்ல… ஸ்வீட்டியை கொன்று உடலை காட்டில் வீசிய கணவர்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.