புதுடெல்லி,
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசுகையில்,
“2013ல், மோர்கன் ஸ்டான்லி, உலகின் ஐந்து பலவீனமான பொருளாதாரங்கள் பட்டியலில் இந்தியாவை சேர்த்தது. இந்தியா பலவீனமான பொருளாதாரமாக அறிவிக்கப்பட்டது. இன்று, அதே மோர்கன் ஸ்டான்லி, இந்தியாவை மேம்படுத்தி, அதிக மதிப்பீட்டை வழங்கியது.
9 ஆண்டுகள், நமது அரசாங்கத்தின் கொள்கைகளால் பொருளாதாரம் உயர்ந்து பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. இன்று நாம் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறோம். இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை தந்து வருகின்றன.
இந்தியா தனது எதிர்கால வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடனும், நேர்மறையாகவும் இருக்கும் ஓர் அரிய நிலையில் உள்ளது. நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.