கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட 5 விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.12.24 கோடி செலவில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கல்வியும் சுகாதாரமும் தான் இந்த ஆட்சியின் இரு கண்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு நிகழ்வில் பேசினார். முதலைமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே ஸ்டாலின் மாணவர்களின் கல்வி தொடர்பான திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

நான் முதல்வன், காலை உணவு, புதுமைப் பெண், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பல்வேறு நகரங்களில் பிறபடுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் கட்டப்பட்டு இன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 3 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;
கடலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவியர் விடுதிக் கட்டடம
தேனி தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 2 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;
தஞ்சாவூரில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;
மதுரை மாவட்டம், மேலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;
என மொத்தம் 12 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.