காற்று மாசுபாடு அதிகரிப்பு – இடம் மாறும் தலைநகர்.. மெட்ரோ தான் முக்கிய காரணமா?

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 70 லட்சம் பேரின் மரணத்திற்கு காற்று மாசு முக்கிய காரணமாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வாகனத்திலிருந்து வெளியாகும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை உள்ளிட்டவைகளால் தொடர்ந்து காற்றின் மாசு அதிகரித்துக்கொண்டே உள்ளது. பல நாட்கள் காற்றின் தரக்குறியீடு மோசமான அளவிலே பதிவாகி வருகிறது. இதனால் உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி இருந்து வந்தது.

மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்படும் ஒரு கோடி விண்னப்பங்கள்! வீட்டிற்கு வரும் அதிகாரிகள்!

இந்த நிலையில் உலக அளவில் காற்று மாசு அதிகளவில் பதிவாகும் நகரங்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த பட்டியலில் டெல்லி இல்லை என்பது தலைநகர் வாழ் மக்களுக்கு நிம்மதியளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது.

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு காற்றின் தரக் குறியீடை கண்காணிக்கும் IQAir என்ற நிறுவனம், பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில் காற்று மாசு எப்படி உள்ளது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்து, புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

தக்காளி தவிர வேறு எந்த பொருளின் விலை தலைவலியாக உள்ளது?

அதன்படி, உலகிலேயே அதிகமாக காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தா முதலிடத்தில் உள்ளது. நச்சுப் புகை அதிகரிப்பை கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் அங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜகர்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சுமார் 3 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மற்ற அதிக காற்று மாசடைந்த நகரங்களான சவுதி அரேபியாவின் ரியாத், கத்தார் தலைநகர் தோகா, பாகிஸ்தானின் லாகூர் ஆகியவற்றில் பதிவான மாசைவிட ஜகர்தாவில் மாசு அதிகமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த பிஎம் 2.5 என்ற அளவை விட பலமடங்கு அதிகமாக காற்றில் தரம் இங்கு உள்ள நிலையில், பொதுமக்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

கல்லூரிகளில் ஒரே பாடத் திட்டமா? தமிழக அரசு அறிவித்துள்ள சூப்பர் சலுகை!

இதுதொடர்பாக பேட்டியளித்த இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ, “ஜகர்தாவில் காற்று மாசை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு போர்னியோ தீவில் உள்ள நுசந்தராவிற்கு தலைநகரை மாற்ற நாடு தயாராகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜகர்தாவில் நடைபெறும் மெட்ரோ பணிகள் முடிந்துவிட்டால் காற்று மாசு குறைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.