கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பாகக் கவனம் செலுத்தி, நுகர்வோரைப் பாதுகாக்கும் எதிர்காலத் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னான்டோ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சின் அறிவித்தலுக்கு அமைய விசேட அறிவிப்பை வழங்கிய வர்த்தக அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:
ஒரு நாளைக்கு நாட்டிற்கு 85இலட்சம் முட்டைகள் அவசியமானாலும் 55 இலட்சம் முட்டைகள் மாத்திரமே நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கிணங்க நுகர்வோருக்கு 35இலட்சம் முட்டைகள் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றன. இப்பற்றாக்குறையை நிரப்புவதற்காக 1/3 பங்கிற்கு, ஒரு நாளைக்கு 10 இலட்சம் முட்டைகளைக் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு நுகர்வோரின் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கோழி இறைச்சி மற்றும் மீன்களின் விலை அதிகரிப்புடன் முட்டைக்கு கேள்வி அதிகரித்துள்ளது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மேலும் முட்டை உற்பத்தியை அதிகரிக்க முடியுமாயின் நாட்டிற்கு அவசியமான முட்டை நாட்டினுள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
அதற்காக விலங்கு உற்பத்தியாளர்களுக்கு அவசியமான பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விலங்கு உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.
கோழி இறைச்சி விலை ஆகக் குறைந்தது 150ரூபாவினாலாவது குறைப்பதற்கும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சந்தையில் உற்பத்திப் போட்டியை அதிகரிப்பது அத்தியாவசியமானது. சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளின் உற்பத்தியை பரவலாக அதிகரிப்பதன் ஊடாக மாத்திரமே இதற்கு தீர்வு கிடைக்கும்.
நுகர்வோருக்கு ஏதேனும் நிவாரணத்தை பேரருட் கொடுக்கும் திட்டம் தொடர்பாக அறிமுகப்படுத்தல் குறித்து அறிமுகப்படுத்துவதற்காக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.