சிறுவாபுரி கோயிலில் தீண்டாமை கொடுமையா : நடிகர் யோகி பாபு விளக்கம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் யோகி பாபு, ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பிரசித்தி பெற்ற ஆலையங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் சிறுவாபுரி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றபோது, அங்கு குருக்கள் ஒருவருக்கு யோகி பாபு கைகொடுக்கும் போது , அவர் இவரது கையை தொடாமல் ஆசி வழங்குவது போன்று ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அதை பார்த்த ரசிகர்கள் யோகி பாபுவுக்கு தீண்டாமை கொடுமை நடந்திருப்பதாக சொல்லி அந்த அர்ச்சகரை விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் இது குறித்து யோகி பாபு ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், சிறுவாபுரி கோயிலுக்கு கடந்த 12 ஆண்டுகளாக நான் சென்று வருகிறேன். அப்போதில் இருந்தே அந்த குருக்களை எனக்கு நன்றாக தெரியும். என்னிடத்தில் நன்றாக பழகக் கூடியவர். என்னுடைய நலம் விரும்பி. அவரிடத்தில் நான் கை கொடுக்கவில்லை. அவர் அணிந்த டாலர் பற்றி தான் கேட்டேன். குருக்கள் மேல் எந்தத் தவறும் இல்லை. வேண்டுமென்றே யாரோ திட்டமிட்டு இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டார்கள். அந்த குருக்களால் எனக்கு தீண்டாமை எதுவும் நடைபெறவில்லை. இதில், சாதி எல்லாம் பார்க்க வேண்டாம் என்று ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் யோகி பாபு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.