தமிழ்நாட்டில் இன்று காலையிலேயே பல மாவட்டங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சென்னையிலும் இன்று மதியத்துக்கு மேல் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில்
பெய்து வருகிறது.
இன்று (ஆகஸ்ட் 10) திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
நாளைய தினமும் (ஆகஸ்ட் 11) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. முகையூர் 12, கிராண்ட் அணைகட்டு, மணம்பூண்டி, கும்பகோணம் ஆகிய ஊர்களில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.