திமுகவை பார்த்து பயந்து நடுங்கும் பாஜக: தொண்டர்களை உற்சாகப்படுத்தும் ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி முதலவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் பாஜக அரசு, திமுகவை பார்த்து பயப்படுவதாகவும், நடுங்குவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூர் வன்முறையால் கடந்த நான்கு மாதங்களாக பற்றி எரிந்து வருகிறது. மக்கள் தங்கள் உடமைகளையும், உயிர்களையும் இழந்து வருகின்றனர். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் கொடூரமாக நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவோ, அது குறித்து நாடாளுமன்றத்தில் பேசவோ இல்லை.

மோடியை பேச வைப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இது தொடர்பாக மூன்று நாள்களாக விவாதங்கள் நடந்த நிலையில் இன்று பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.

மாநிலங்களவையில் கர்ஜித்த வைகோ

முன்னதாக இரண்டு நாள்கள் மக்களவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திமுகவை குறிவைத்து அமைச்சர்கள் பேசியிருப்பது பாஜகவுக்கு திமுக மீதான பயத்தைக் காட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.

“ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளிக்க முடியாத அமைச்சர் ஸ்மிருதி ராணி, தனது பேச்சில் திமுகவை எதிர்த்து பேசியுள்ளார். மக்களவை உறுப்பினர் ஆ.இராசா சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

‘நான் கைது செய்யப்படப் போவதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பாஜக அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?’ என்று ஆ.இராசா கேட்டார். ஆனால் பாஜக தரப்பில் இருந்து உரிய பதில் தரப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, ‘எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்’ என்ற வகையில் ஒரு அமைச்சர் பேசினார்.

திமுக இந்த மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவையில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள். திமுக துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பாஜகவின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். தயாநிதி மாறன் அவர்கள் டெல்லி சட்டமசோதா பற்றி பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.