முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல். இராணுவத்தின் பிராந்திய கட்டளை நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதால், மேலே குறிப்பிடப்பட்ட பாத்திரங்களுக்கு மேலதிகமாக, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் தற்போதுள்ள சிவில்-இராணுவ உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக சமூக நலன் சார்ந்த பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
முல்லைத்தீவுப் பிரதேச மக்கள் கஷ்டங்களோடு பின்னிப் பிணைந்துள்ள நிலையில், பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்குவதன் மூலம் தேவைப்படும் குடும்பங்களின் அவலத்தைப் போக்க அர்ப்பணிப்புள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கை இடத்திற்கான அடிப்படை உரிமையை அங்கீகரித்து, இந்த முன்முயற்சியானது, துன்பங்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பதை நோக்கமாகக் கொண்டதுடன் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் காலடி எடுத்து வைக்க உதவுகிறது.
முல்லைத்தீவில் உள்ள வறிய குடும்பங்கள் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதில், இராணுவத் தளபதிகளின் வழிகாட்டுதலின் பேரில், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகக் குழுக்களின் ஆதரவுடன் பலதரப்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. வறுமை மற்றும் பாதிப்பின் சுழற்சியை உடைக்கும் நோக்கில், குடும்பங்களுக்கு ஒழுக்கமான மற்றும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கு இராணுவம் அயராது செயல்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவுப் படையினர் தங்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தால் தகுதியான பொதுமக்களுக்கு 207 வீடுகளை நிர்மாணித்து ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் அந்தந்த படைப்பிரிவு தளபதிகள் மற்றும் பிரிகேட் தளபதிகள் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் தன்னலமற்ற முயற்சியின் கீழ், மேலும் 4 வறியவர்களுக்கான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 2009 – 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்காக படையினர் அந்த புதிய வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு பிரதேச வீட்டுத்திட்டங்கள் பல வறுமையில் வாடும் குடும்பங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இராணுவத்தின் அர்ப்பணிப்பு மூலம், இந்த முயற்சிகள் பலனைத் தந்துள்ளதுடன், குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பிரகாசமான எதிர்காலத்தை கற்பனை செய்வதற்கும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக மாற்றியுள்ளன.
முல்லைத்தீவு பிரதேசத்தில் வறுமையில் வாடும் எமது சமூகத்தின் காயங்களைக் குணப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சிறந்த நாளை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இராணுவம் முல்லைத்தீவில் உள்ள மக்களுக்கு 24 மணி நேரமும் தாராளமாக உதவிக் கரம் நீட்டியுள்ளது.