பீஜிங்: கடந்த 10 மாதங்களாக இந்தியாவுக்கான தூதரை சீனா நியமிக்காமலேயே இருந்து வருகிறது.
இந்தியாவுக்கான சீன தூதராக அந்நாட்டின் வெளியுறவு துறையின் திட்டம் மற்றும் கொள்கை பிரிவு இயக்குனராக இருந்த சன் வெய்டாங் 2019ல் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் அவரை சீன வெளியுறவு துணை அமைச்சராக நியமித்தது சீன அரசு. இதனையடுத்து இந்தியாவுக்கான சீன தூதர் பதவி காலியானது.
இந்தியா – சீனா தலைவர்கள் இடையே நடக்கவுள்ள சந்திப்புகள், ஜி-20 கூட்டங்கள் போன்றவைகள் உள்ள நிலையில், கடந்த 10 மாதங்களாக தூதரை நியமிக்காமல் சீனா காலம் தாழ்த்தி வருகிறது. சில நாடுகளுக்கு தூதர்களை நியமித்த சீன அதிபர் ஷி ஜின்பிங் இதுவரை இந்தியாவுக்குத் தூதரை நியமிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement