Jailer:ஆன்லைனில் ஹெச்.டி. ப்ரிண்ட்டில் கசிந்த ஜெயிலர்: இது என்னய்யா ரஜினிக்கு வந்த சோதனை

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. ஜெயிலர் படம் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

தளபதிக்கு பெயர் மாற்றம் தான் செய்யனும்
ரொம்ப காலம் கழித்து வின்டேஜ் ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் படம் வெளியான கையோடு அது ஆன்லைனில் கசிந்துவிட்டது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆன்லைனில் அதுவும் ஹெச்.டி. ப்ரிண்ட்டில் வந்திருக்கிறது. இதனால் காசு கொடுத்து தியேட்டருக்கு போய் ஜெயிலர் படத்தை பார்க்க வேண்டுமா என யோசித்தவர்கள் டவுன்லோடு செய்து பார்த்துவிடுவார்கள். மேலும் வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு செல்லலாம் என்று இருப்பவர்களும் டவுன்லோடு பக்கம் திரும்பும் வாய்ப்பு அதிகம்.

ஜெயிலர் விமர்சனம்

இந்த ஆன்லைன் கசிவால் ஜெயிலர் படத்தின் வசூல் பாதிக்கப்படும். என்ன தான் ஆன்லைனில் கசிந்தாலும் ரஜினியை பெரிய திரையில் மட்டுமே பார்த்து ரசிப்போம் என்கிற உறுதியுடன் இருக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக தியேட்டர்களுக்கு செல்வார்கள். அதில் சந்தேகமே இல்லை.

வார நாளாச்சே, ஜெயிலர் வருகிறதே என்று பார்த்தால் ரஜினி படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏம்ப்பா, ஊரில் உள்ள கூட்டம் எல்லாம் தியேட்டர்களில் இருக்கிறதே, உங்களுக்கு எல்லாம் அலுவலகத்தில் மேனேஜர்கள் எப்படிய்யா லீவு கொடுத்தார்கள் என லீவு கிடைக்காதவர்கள் புலம்புகிறார்கள்.

ஜெயிலர் படத்தை பார்க்க இன்று காலை ஹெச்.ஆருக்கு போன் செய்து சார் வயித்து வலி சார், காய்ச்சல் சார், தலைவலி சார் என பலரும் பொய் சொல்லி லீவு கேட்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் யாரும் பொய் சொல்லி லீவு கேட்க வேண்டாம் என்று சில நிறுவனங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி விடுமுறை அறிவித்துவிட்டன.

Jailer Collection: வசூலில் அமெரிக்காவில் புது சாதனை படைத்த ஜெயிலர்: தலைவர் நிரந்தரம்

மேலும் யாரும் ஜெயிலரை டவுன்லோடு செய்து பார்க்கக் கூடாது என்பதால் ஊழியர்களுக்கு இலவசமாக டிக்கெட்டும் கொடுத்துள்ளன சில நிறுவனங்கள்.

இப்படி லீவும் கொடுத்து, டிக்கெட்டும் கொடுத்த அந்த சூப்பர் நிறுவனங்கள் எல்லாம் ஏன் எங்கள் ஊரில் இல்லை என சிலர் கடுப்பாகியிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.