Jailer: ஜெயிலர் படம் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த தம்பதி: தூய தமிழில் பேசி அசத்தல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து படம் ஜப்பானில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த பட ரிலீஸுக்கு பிறகு ஜப்பானில் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் கிடைத்துவிட்டார்கள். இந்நிலையில் ஜப்பானில் இருக்கும் ரஜினி ரசிகர் மன்ற தலைவரான யசுடா ஹிடடோஷி ஜெயிலர் படத்தை பார்க்க தன் மனைவியுடன் சென்னை வந்திருக்கிறார்.

தளபதிக்கு பெயர் மாற்றம் தான் செய்யனும்

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவர் செய்தியாளர்களிடம் தூய தமிழில் பேசி அசத்திவிட்டார். யசுடா கூறியதாவது,

இப்போ ஜெயிலர் படம் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்தேன். ஹுகும் டைகர் கா ஹுகும். முத்து படம் பார்த்ததில் இருந்து நான் ரஜினி ரசிகர். முத்துவை அடுத்து பாட்ஷா படம் பார்த்தேன். ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்றார்.

ஜெயிலர் படம் பார்க்க ஜப்பானில் இருந்து யசுடா தம்பதி வந்திருக்காக, தியேட்டருக்கு தனுஷ் வந்திருக்காக, அனிருத் வந்திருக்காக இது ஜெயிலர் திருவிழா என்கிறார்கள் ரசிகர்கள்.

Jailer Twitter Review: கொல மாஸ், தீயா இருக்கு, கண்டிப்பா பிளாக்பஸ்டர் தான்: ஜெயிலர் ட்விட்டர் விமர்சனம்

ஜெயிலர் படம் பார்க்கும் அனைவரும் அது குறித்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஜெயிலர் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும். தலைவரின் நடிப்பு வேர லெவல். வின்டேஜ் தலைவர் வைப்ஸ். நல்ல படம் கொடுத்திருக்கிறீர்கள் நெல்சா.

அனிருத்தின் பிஜிஎம் வேற லேவல். யோகிபாபுவின் காமெடி அருமை. தியேட்டர் முழுவதும் சிரிப்பு சப்தமாக இருக்கிறது என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.

Jailer: தலைவர் ரசிகன்டா: ஜெயிலர் FDFS பார்க்க தியேட்டருக்கு வந்த தனுஷ்

ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மிஸ் பண்ணக் கூடாது என்று சென்னையில் இருக்கும் ரோஹினி தியேட்டருக்கு வந்தார் ரஜினி ரசிகரான தனுஷ். மேலும் இசையமைப்பாளர் அனிருத்தும் ரசிகர்களுடன் சேர்ந்து வெற்றி தியேட்டரில் படம் பார்த்தார்.

படம் பார்த்ததுடன் தியேட்டரில் பாட்டு பாடி அசத்தினார் அனிருத். வார நாளில் படத்தை ரிலீஸ் செய்தபோதிலும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. ரஜினியின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்ததுடன், தியேட்டர் வாசல்களில் பட்டாசு வெடித்து திருவிழாவை கொண்டாடியிருக்கிறார்கள்.

முன்னதாக ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.