இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில், பார்லிமென்ட் நேற்று(ஆக.,09) கலைக்கப்பட்டது. ஆனால், பொருளாதார சூழ்நிலை காரணமாக, தேர்தல் நடத்தப்படுவது தள்ளிப் போகும் சூழல் உள்ளது.
2018 ல் பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு தேர்தல் நடந்தது. அப்போது பிரதமராக இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டார். அவரது ஆட்சி கவிழவே, ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. பதவிக்காலம் வரும் 12ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், பார்லிமென்ட்டை கலைக்கும்படி அதிபருக்கு, ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்டு பார்லிமென்ட் கலைக்கப்பட்டது.
இடைக்கால பிரதமரை நியமிக்கவும், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தவும் அதிபர் அனுமதி வழங்கி உள்ளார். ஆனால், பொருளாதார சிக்கல் காரணமாக நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில், அரசியல் மற்றும் பாதுகாப்பு சவால்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்தல் ஒராண்டிற்கு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இம்ரான் கானுக்கு தடை
ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்றதால், முன்னாள் பிரதமர் இம்ரான் கானால் வரும் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement