'வேதாளம்' தெலுங்கு ரீமேக் : 'வேஸ்ட்' என புலம்பும் ரசிகர்கள்
சிவா இயக்கத்தில், அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. அப்படத்தை தெலுங்கில் 'போலா சங்கர்' என ரீமேக் செய்தார்கள். மெஹர் ரமேஷ் இயக்க, சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா மற்றும் பலர் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
வழக்கம் போல சிரஞ்சீவி ரசிகர்கள் காலை சிறப்புக் காட்சிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பில் படம் பார்க்கச் சென்றுள்ளார்கள். ஆனால், படம் 'வேஸ்ட்' ஆகிவிட்டதாக அவர்கள் புலம்புகிறார்கள். தெலுங்கிற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்களாம். அண்ணன், தங்கை சென்டிமென்ட்டை மட்டும் அப்படியே வைத்திருக்கிறார்கள். சிரஞ்சீவி மட்டுமே படத்தில் ரசிக்கும்படியாக நடித்திருக்கிறார் என்றும், மற்றவர்கள் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
ரீமேக் படங்களின் காலம் அழிந்துவிட்ட நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தை ரீமேக் செய்வதா என்பதே பலரது கருத்தாக உள்ளது.