₹ 98,919 விலையில் டிவிஎஸ் ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

125cc சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் பிளாக் பாந்தர் மற்றும் ஐயன் மேன் என இரண்டு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மால்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கதாப்பாத்திரங்கள் அயன் மேன் பிளாக் பேந்தர் ஆகியவற்றில் இருந்து கதாநாயகர்களின் உடை வடிவமைப்பினை அடிப்படையாக கொண்டுள்ளது.

ரைடர் 125 மாடலில் 124.8cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் மூன்று வால்வுகளை பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

TVS Raider Super Squad Edition

சூப்பர் ஹீரோக்களின் ஆடைகளின் அடிப்படையில் இரண்டு வண்ணப்பூச்சுகள் உள்ளன. கருப்பு மற்றும் ஊதா நிறத்தில் சில வெள்ளி பூச்சு மற்றும் பின்புறத்தில் ஒரு கருப்பு பாந்தர் லோகோ உள்ளது. அடுத்து, அயர்ன் மேன் மூலம் ஈர்க்கப்பட்ட வண்ணப்பூச்சு வேலை வெள்ளி நிறத்துடன் சிவப்பு மற்றும் கருப்பு பூச்சு பெறுகிறது.

இரண்டு பைக்குகளும் ஹெட்லேம்ப் கவுலில் ‘A’ லோகோவை கொண்டுள்ளன. இது மார்வெலின் அவெஞ்சர்ஸிற்கான அட்டையாக உள்ளது.

டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17-இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/90-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் கொண்டுள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 Super Squad Edition விலை ரூ. 98,919 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இது தவிர, மேலும் மூன்று வகைகள் உள்ளன: SX, ஸ்பிளிட் சீட் மற்றும் ஒற்றை இருக்கை என கிடைக்கின்றது.

tvs raider black panther

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.