Jailer Collection: 2023ல் தமிழகத்தில் முதல் நாளே அதிகம் வசூலித்த படம் ஜெயிலர்: எத்தனை கோடி தெரியுமா?

Jailer movie collection: 2023ம் ஆண்டில் ரிலீஸான அன்றே அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது ஜெயிலர்.

​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது. இதனால் ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டமாக இருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகத் துவங்கியிருக்கிறது.

​ஜெயிலர் விமர்சனம்நெல்சன்​சொல்லி அடித்த நெல்சன் ரஜினியின் பெரிய Hit​​ரூ. 52 கோடி​ஜெயிலர் படம் ரிலீஸான அன்று இந்தியாவில் மட்டும் ரூ. 52 கோடி(Gross) வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஜெயிலருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 2023ம் ஆண்டு தமிழகத்தில் பெரிய ஓபனிங் பெற்ற தமிழ் படமாக இருக்கிறது ஜெயிலர். மேலும் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஜெயிலரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
​வசூல் விபரம்​ரஜினி முத்துவேல் பாண்டியனாக நடித்த ஜெயிலர் படம் தமிழகத்தில் ரூ. 23 கோடி வசூல் செய்திருக்கிறது. கேரளாவில் ரூ. 5 கோடியும், கர்நாடகாவில் ரூ. 11 கோடியும், ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் ரூ. 10 கோடியும், பிற மாநிலங்களில் ரூ. 3 கோடியும் வசூல் செய்திருக்கிறது. இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் ஜெயிலர் படம் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல் வந்திருக்கிறது.
​அமெரிக்கா​ஜெயிலர் படம் அமெரிக்காவில் ஒரே நாளில் 1.5 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. அதில் ப்ரீமியர் ஷோ வசூலும் அடக்கம். அமெரிக்காவில் டிக்கெட் முன்பதிவிலும் ஜெயிலர் சாதனை படைத்திருக்கிறது. வசூலிலும் தொடர்ந்து புது சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எல்லாம் பார்க்கும் ரஜினி ரசிகர்களோ, தலைவர் நிரந்தரம் என பெருமையாக பேசி வருகிறார்கள்.

​Jailer Collection: வசூலில் அமெரிக்காவில் புது சாதனை படைத்த ஜெயிலர்: தலைவர் நிரந்தரம்

​முத்துவேல் பாண்டியன்​ஜெயிலர் படத்தில் ரஜினியும், யோகி பாபுவும் சேர்ந்து காமெடி செய்திருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் ஆட்டம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. வின்டேஜ் ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். மும்பையில் இருக்கும் தியேட்டர் ஒன்றில் ரஜினியின் அறிமுக காட்சியை பார்த்து ரசிகர்கள் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் சில நொடிகள் என்ஜாய் பண்ண வசதியாக படத்தை பாஸ் செய்திருக்கிறது தியேட்டர் நிர்வாகம்.

​ரஜினிக்காக தியேட்டரில் பாதியில் நிறுத்தப்பட்ட ஜெயிலர்

​அனிருத்​ஜெயிலர் படம் பார்த்த அனைவரும் அனிருத்தின் பி.ஜி.எம்.மை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் வரும் காட்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள். இடைவேளை காட்சி, ரஜினியின் ஃபிளாஷ்பேக், ஹுகும் எல்லாம் வரும் போது தியேட்டர்களில் விசில் பறக்கிறது. சுனில் வரும் காட்சி தான் தேவையில்லாதது போன்று தெரிவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

​ரஜினி குடும்பம்​Jailer FDFS: ஒரே தியேட்டரில் Jailer FDFS பார்த்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஜெயிலர் படத்தை ரஜினியின் குடும்பத்தார் ரசிகர்களுடன் சேர்ந்து ரோஹினி தியேட்டரில் பார்த்து ரசித்தார்கள். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், அனிருத்தின் பெற்றோர் ஆகியோர் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சேர்ந்து பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத்தோ வெற்றி தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.