மாஸ்கோ: கடந்த மாதம் நிலவை நோக்கி செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான்-3, ஆக.,23ல் நிலவில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், ரஷ்யா ‘லூனா-25’ என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இது சந்திரயான்-3க்கு முன்னதாகவே ஆக.,21ல் நிலவில் தரையிறங்குகிறது. ரஷ்யாவிற்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது.
நிலவை நோக்கி லூனா -25 என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பி உள்ளது. கடந்த 1976 க்கு பிறகு இந்த ரஷ்யா விண்கலத்தை அனுப்பி உள்ளது. இந்த விண்கலம், சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே, தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிகிறது.
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறியதாவது: இந்த விண்கலம் அடுத்த 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நாட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்க உள்ளது. ஆக.,21 ல் இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இஸ்ரோ வாழ்த்து
லூனா 25 விண்கலத்தை அனுப்பிய ரஷ்யாவிற்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. சந்திரயான் -3, லூனா25 விண்கலங்கள் வெற்றிகரமாக இலக்கை அடைய வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement