மூணாறு: பள்ளி மாணவர்களிடையே சுற்றுச் சூழல், குப்பைகளை கையாளுதல் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்களை கொண்டு அறை, கிணறு ஆகியவற்றை உருவாக்கி சன்னியாசிஓடை பட்டம் நினைவு அரசு ஆரம்ப பள்ளி முன் மாதிரியானது.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே சன்னியாசிஓடையில் பட்டம் நினைவு அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் இடையே சுற்றுச் சூழல், குப்பைகளை கையாளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக், கண்ணாடி ஆகிய பாட்டில்களைக் கொண்டு அழகிய அறை, கிணறு ஆகியவை அமைக்கப்பட்டன. அவற்றை கருணாபுரத்தைச் சேர்ந்த தையம் எனும் நாட்டிய கலைஞர் சஜி தலைமையில் உருவாக்கப்பட்டது. அதற்கு 5 ஆயிரம் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்பட பல்வேறு கழிவு பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பாட்டில்களில் சிமென்ட் நிறைத்து அடுக்கி அறை தயார் செய்யப்பட்டது. அதேபோல் கிணற்றிற்கு அடித்தளமும், பாட்டில்களால் சுற்றுச் சுவரும் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
தற்போது பாட்டில் அறையில் மாணவர்களுக்கு களிமண், பேப்பர் ஆகியவற்றைக் கொண்டு கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement