கடந்த சில நாட்களாக நடிகர் விஷால் – நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில் திருமணம் குறித்த வதந்திக்கு நடிகர் விஷால் விளக்கமளித்திருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/MyJWpPNm_400x400.jpg)
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், “ பொதுவாக என்னைப் பற்றிய போலி செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அது பயனற்றது என்பது எனக்கு தெரியும். ஆனால் நடிகை லட்சுமி மேனனுடன் எனக்குத் திருமணம் என பரவிவரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது.
என்னுடைய இந்த விளக்கத்திற்கான காரணம் இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் நடிகை என்பதை தாண்டி முதலில் அவர் ஒரு பெண். அதனால் நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து அவரின் அடையாளத்தைக் கெடுக்காதீர்கள்.
Usually I don’t respond to any fake news or rumors about me coz I feel it’s useless. But now since the rumour about my marriage with Laksmi Menon is doing the rounds, I point blankly deny this and it’s absolutely not true and baseless.
The reason behind my response is only…
— Vishal (@VishalKOfficial) August 11, 2023
தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று விஷால் பதிவிட்டிருக்கிறார்.