Vishal: லட்சுமி மேனனுடன் திருமணம் இல்லை, ஒரு பொண்ணு பெயரை கெடுக்காதீங்க: விஷால்

விஷாலுக்கு திருமணம் நடக்க வேண்டும், அவரை மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் விஷாலுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளியானது.

சொல்லி அடித்த நெல்சன் ரஜினியின் பெரிய Hit
பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் விஷாலும், லட்சுமி மேனனும் சேர்ந்து நடித்தார்கள். இந்நிலையில் வெளியான திருமண தகவல் கண்டிப்பாக வதந்தியாகத் தான் இருக்கும் என நம்பப்பட்டது. இதையடுத்து விஷாலே அது குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விஷால் கூறியிருப்பதாவது,

என்னை பற்றி வரும் பொய்யான செய்தி அல்லது வதந்திகள் குறித்து நான் கண்டுகொள்வது இல்லை. ஏனென்றால் அவை தேவையில்லாதவை என நினைப்பவன். ஆனால் தற்போது எனக்கும், லட்சுமி மேனனுக்கும் திருமணம் என வதந்தி பரவியிருப்பதால், அது பொய் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த தகவலில் உண்மை இல்லை, அது ஆதாரமற்றது. ஒரு நடிகை என்பதை தாண்டி ஒரு பெண்ணை தொடர்புபடுத்தி வதந்தி வந்திருப்பதால் மட்டுமே நான் விளக்கம் அளித்திருக்கிறேன். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுப்பதுடன், அவரின் இமேஜை நாசம் செய்கிறீர்கள்.

நான் எந்த ஆண்டில், எந்த தேதியில், எந்த நேரத்தில் யாரை திருமணம் செய்வேன் என்று கண்டுபிடிக்க இது ஒன்றும் பெர்முடா முக்கோணம் இல்லை. நேரம் வரும்போது நானே என் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

Jailer Collection: 2023ல் தமிழகத்தில் முதல் நாளே அதிகம் வசூலித்த படம் ஜெயிலர்: எத்தனை கோடி தெரியுமா?

விஷாலின் விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

இது வதந்தி என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒரு பெண்ணின் பெயர் கெட்டுவிடக் கூடாது என பதறியடித்து பொறுப்புடன் விளக்கம் அளித்திருப்பது நல்லது.

ஆனால் உங்களை மணக்கோலத்தில் பார்க்க ஆசையாக இருக்கிறது அண்ணா. விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

சில மொரட்டு சிங்கிள்ஸோ, நமக்கும், விஷால் அண்ணாவுக்கும் இந்த ஜென்மத்தில் திருமணம் நடக்காது போலயே என ஃபீல் பண்ணுகிறார்கள்.

முன்னதாக அர்ஜுன் ரெட்டி படம் புகழ் தெலுங்கு நடிகையான அனிஷாவும், விஷாலும் காதலித்தார்கள். அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அனிஷாவும், விஷாலும் பிரிந்துவிட்டார்கள்.

அனிஷாவை பிரிந்த பிறகு சிங்கிளாக இருந்து வருகிறார் விஷால். இந்நிலையில் நடிகை அபினயாவும், விஷாலும் காதலிக்கிறார்கள் என பேச்சு கிளம்பியது. நாங்கள் காதலிக்கவில்லை என விஷாலும், அபினயாவும் தெரிவித்தார்கள்.

அபினயாவை அடுத்து லட்சுமி மேனனின் பெயர் அடிபட்டிருக்கிறது. படிப்பதற்காக நடிப்பில் இருந்து பிரேக் எடுத்தார் லட்சுமி மேனன். புலிக்குத்தி பாண்டி மூலம் திரும்பி வந்த லட்சுமி மேனன் தொடர்ந்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். விஷாலோ கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.