ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம். மோகன்லால், சிவராஜ்குமார் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. காமெடி, ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஆகஸ்ட் 10ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Bhola Shankar (தெலுங்கு)
மெஹர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், ரகுபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘Bhola Shankar’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது இன்று (ஆகஸ்ட் 11ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காவல் துறையினரே சமாளிக்க முடியாத ரவுடி கும்பல்களை அசால்ட்டாக எதிர்கொள்ளும் தாதாவாக இருக்கிறார் சிரஞ்சீவி. இதனால் ஒரு கட்டத்தில் ரவுடி கும்பல்கள் அவருக்கும், அவரை சுற்றியிருப்பவர்களுக்கும் பிரச்னைகள் கொடுக்கின்றன. இந்த ரவுடி கும்பல்களுக்கு சிரஞ்சீவி பதிலடி கொடுத்தாரா? உண்மையில் அவர் யார்? என்பதுதான் இதன் கதைக்களம்.
Gadar 2 (இந்தி)
அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், அமீஷா படேல், உத்கர்ஷ் சர்மா, மனிஷ் வாத்வா, கௌரவ் சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘Gadar 2’. பீரியாடிக் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது இன்று (ஆகஸ்ட் 11ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனியாகப் பிரிக்கப்பட்டபோது நடக்கும் காதலர்களின் பிரிவு மூலம் அப்போது நடந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றி பேசும் படமாக 2001-ல் வெளியானது ‘Gadar’ திரைப்படம். இதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இப்படம்.
முதல் பாகத்தில் காதல் மனைவியைப் பிரிந்து பாகிஸ்தானிற்குக் குடியமர்த்தப்படும் கணவன் தன் மனைவியையும், மகனையும் காண மீண்டும் இந்தியா வருகிறார். அதனால் நடக்கும் பிரச்னைகள், அரசியல் மற்றும் 1971-ல் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட கதைக்களம் இது.
OMG 2 (இந்தி)
மிட் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி, யாமி கெளதம், அமீர் நாயக் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘OMG 2’ இன்று (ஆகஸ்ட் 11ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
2012ம் ஆண்டு வெளியான ‘OMG’ திரைப்படம் கடவுள் பூமிக்கு வந்து கடவுள் நம்பிக்கையற்ற ஒருவருக்குத் தன் இருப்பையும், ஆன்மீக ஆர்த்தங்களையும் உணர்த்தும் படமாக எடுக்கப்பட்டது. இப்படம் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. இதன் இரண்டாவது படமாக வெளியாகியுள்ளது ‘OMG 2’. சிவன் பக்தனாக இருக்கும் ஒருவரின் குடும்பத்தில் பல பிரச்னைகள் உருவாகின்றன. படிக்கும் அவரின் மகனும் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற சிவனின் அருளால் பூமிக்கு வந்து அவரின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து அதன் மூலம் அவருக்கு ஆன்மீக அர்த்தங்களைப் புரிய வைப்பதுதான் இதன் கதைக்களம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
வான் மூன்று (தமிழ்) – Aha
ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில் டெல்லி கணேஷ், லீலா சாம்சன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வான் மூன்று’. நெகிழ்ச்சியான காதல் திரைப்படமான இது ஆகஸ்ட் 11ம் தேதி ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இளம் வயது காதலர்கள், திருமணமானக் காதலர்கள், 60 வயதைக் கடந்து வாழ்வின் எல்லையில் காதலைப் புத்துயிர்ப்புச் செய்யும் காதலர்கள் என மூன்று தலைமுறையினரின் காதலை வெவ்வேறு பரிணாமங்களில் சொல்லும் கதைக்களமாக அமைந்துள்ளது இப்படம்.
Red, White & Royal Blue (English) – Amazon Prime Video
மத்தேயு லோபஸ் இயக்கத்தில் ஜெம்மா ரெட்கிரேவ், தாமஸ் ஃபிளின், பிரிட்ஜெட் பென்ஸ்டெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் ‘Red, White & Royal Blue’. ‘LGBT’ சம்மந்தமான காதல் திரைப்படமான இது ஆகஸ்ட் 11ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
‘LGBT’ காதலையும் மையமாக வைத்து அமெரிக்க எழுத்தாளர் கேசி மெக்விஸ்டன் எழுதிய நாவல் ‘Red, White & Royal Blue’. இதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அமெரிக்க பிரசிடன்டின் மகன் அலெக்ஸ் கிளேர்மாண்ட்-டயஸ் மற்றும் பிரிட்டிஷ் இளவரசரான ஹென்றி இருவரும் நண்பர்களாகப் பழகத் தொடங்குகிறார்கள். ஒருகட்டத்தில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட இரண்டு ஆண்களும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இவர்களின் காதலை இச்சமூகம் புரிந்து கொண்டதா? இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதுதான் இதன் கதைக்களம்.
Heart Of Stone (English) – Netflix
டாம் ஹார்பர் இயக்கத்தில் கால் கடோட், ஜேமி டோர்னன், ஆலியா பட், மத்தியாஸ், ஜிங் லூசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் ‘Heart Of Stone’. ஆக்ஷன்-க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 11ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹேக்கராக இருக்கும் வில்லன் பயங்கரமான ஆயுதங்களைக் கொள்ளையடித்து அதைப் பயன்ப்படுத்தி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகிறார். அந்த வில்லனிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி அவரைக் கைது செய்யும் அசாத்தியமானப் பணி எதையும் செய்து முடிக்கும் ஆக்ஷன் ஏஜென்ட்டாக இருக்கும் கதாநாயகியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதற்காக அவர் பல தியாகங்களைச் செய்ய வேண்டிருக்கிறது. காதல், உறவுகள், நண்பர்களைத் துறந்து மனதைக் கல்லாக்கிக் கொண்டு அந்த அசாத்தியப் பணியைக் கதாநாயகி செய்து முடித்தாரா? என்பதுதான் இதன் கதைக்களம்.
இந்த வார வெப்சீரிஸ்கள்
வேற மாறி ஆபிஸ் (தமிழ்) – Aha
சிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்தில் RJ விஜய், ஜனனி அசோக் குமார், விஷ்ணு விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் வெப்சீரிஸ் ‘வேற மாறி ஆபிஸ்’. ஆபிஸில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை கலாட்டா ஜானரில் சொல்லும் ஜாலியான கதைக்களத்தைக் கொண்ட இந்த வெப்சீரிஸ் ‘Aha’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Made In Heaven -Season 2 (இந்தி) – Amazon Prime Video
இயக்குநர்கள் ஜோயா அக்தர், அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா, நீரஜ் கய்வான், நித்யா மெஹ்ரா ஆகியோர் இயக்கத்தில் அர்ஜுன் மாத்தூர், சோபிதா துலிபாலா, ஜிம் சர்ப், கல்கி கோச்லின், ஷஷாங்க் அரோரா, ஷிவானி ரகுவன்ஷி, மோனா சிங், திரிநேத்ரா ஹல்தார், ஈஸ்வர் சிங், விஜய் ராஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் ‘Made In Heaven- season 2’. காதல் மற்றும் திருமண உறவுச் சிக்கல்களைப் பற்றி பேசும் இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் வெளியாகி இருக்கிறது.
ஜாலியாகச் சுற்றித் திரியும் நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் காதல் மற்றும் திருமணம் அவர்களைப் பெரும் சிக்கல்களுக்கும், புரிதலின்மைக்கும் ஆளாக்குகிறது. இந்த உறவுச் சிக்கல்களை அவர்கள் எப்படி கையாண்டு புரிந்துகொள்கிறார்கள் என்பதே இதன் கதைக்களம்.
Commando (இந்தி) – DisneyPlus Hotstar
விபுல் அம்ருத்லால் ஷா இயக்கத்தில் பிரேம் பரிஜா, அதா ஷர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Commando’. ஆக்ஷன் – திரில்லர் நிறைந்த வெப்சீரிஸான இது ‘DisneyPlus Hotstar’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் வெளியாகிறது.
இந்தியாவை அழிக்க ஒரு தீவிரவாதக் கும்பல் வெளிநாட்டில் ஒரு பயோ வெப்பனை உருவாக்குகிறது. இதைத் தடுத்து இந்தியாவைக் காப்பாற்ற கதாநாயகனும் அவரது நண்பர்களும் போராடுவதே இதன் கதைக்களம்.
Only Murders in the Building S3 (English) – DisneyPlus Hotstar
ஸ்டீவ் மார்ட்டின், மார்ட்டின் ஷார்ட் மற்றும் செலினா கோம்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Only Murders in the Building S3’. ஒரு பிரமாண்ட அபார்ட்மென்ட்டில் தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. கொலையாளியைக் கண்டுபிடிக்க நெருங்குபவர்களும் வரிசையாகக் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார்? அதன் பின்னனி என்ன? என்பதே இதன் கதைக்களம்.
இரண்டு சீசன்களாக வெளியான இத்தொடரின் மூன்றாவது சீசன் இது. ஹாரர்-க்ரைம் திரில்லர் மற்றும் காமெடி கலந்த ஜானரில் உருவாகியுள்ள இந்த ஆங்கில வெப்சீரிஸ் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ‘DisneyPlus Hotstar’ தளத்தில் வெளியாகிறது.
The Jengaburu Curse (இந்தி) – SonyLIV
நிலா மதாப் பாண்டா இயக்கத்தில் ஃபரியா அப்துல்லா, எம் நாசர், சுதேவ் நாயர், மக்ரந்த் தேஷ்பாண்டே, தீபக், சம்பத், இந்திரனீல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘The Jengaburu Curse’. வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடும் தந்தை-மகளின் கதையான இது ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் வெளியாகி இருக்கிறது.
இறந்துவிட்டார் என்று கூறப்படும் தன் தந்தையைத் தேடி அலைகிறார் கதையின் நாயகியான அவரின் மகள். அந்தத் தேடலில் தன் தந்தை, வளங்களைக் கொள்ளையடிக்கும் பெரிய மைனிங் நிறுவனத்திற்கு எதிராகப் போராடினார் என்று தெரிய வருகிறது. கதையின் நாயகி அவரது தந்தையைக் கண்டுபிடித்தாரா? தந்தையின் போராட்டத்தைக் கையில் எடுத்து மைனிங் நிறுவத்தின் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைத்தாரா? என்பதுதான் இதன் கதைக்களம்.
Painkiller (English) – Netflix
மைக்கா ஃபிட்சர்மேன், நோவா ஹார்ப்ஸ்டர், பீட்டர் பெர்க் உள்ளிட்ட பலரின் இயக்கத்தில் உசோ அடுபா, மேத்யூ ப்ரோடெரிக், டெய்லர் கிட்ச் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Painkiller’. மருத்துவத் துறையில் நடக்கும் அரசியல்,குற்றங்களை தோலுரிக்கும் வெப்சீரியஸான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 10 முதல் வெளியாகிறது.
அமெரிக்காவின் ஏற்படும் ஓபியாய்டு தொற்றுநோய்க்கானக் காரணங்கள் மற்றும் அதன் கொடூரமான விளைவுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் குற்றங்களைப் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதே இதன் கதைக்களம்.
Zombieverse (கொரியன்) – Netflix
மக்கள் அனைவரும் ஷோம்பிக்களாக மாறி ஒருவரை ஒருவர் அழிக்கத் தொடங்குகிறார்கள். கதாநாயன், இதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்து தீர்வுகாணும் வழக்கமான ஷோம்பிக்கள் கதைதான் இதன் கதைக்களம். இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் வெளியாகிறது.
தியேட்டர் டு ஓடிடி
மாவீரன் (தமிழ்/தெலுங்கு) -Amazon Prime Video
‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பைலிங்குவலாக உருவாகியுள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘Amazon Prime’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
குடிசை மாற்று வாரியத்தில் நடக்கும் எளிய மக்களுக்கு எதிரான அரசியல் மற்றும் தரமற்ற, நிலமற்ற அடுக்குமாடி வீடுகளால் பாதிப்படையும் மக்களின் வாழ்வை வித்தியாசமான கமர்ஷியல் ஜானரில் சொல்லும் திரைப்படம் இது.
போர் தொழில் (தமிழ்) – SonyLiv
பெண்களைத் தொடர்ந்து கொலை செய்யும் சீரியல் கில்லர் ஒருவனைத் தேடும் இரண்டு காவல் அதிகாரிகள் சந்திக்கும் சவால்களே இந்த ‘போர் தொழில்’. அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் காவல் அதிகாரிகளாக நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் இப்படம் தற்போது ‘SonyLiv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Neymar (மலையாளம்) – DisneyPlus Hotstar
சுதி மேடிசன் இயக்கத்தில் நாஸ்லென், மேத்யூ தாமஸ், ஜானி ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஜானர் திரைப்படம் ‘Neymar’. இரண்டு நண்பர்களின் வாழ்வில் ஒரு நாய் பல அலப்பறைகள் செய்து அவர்களின் வாழ்வை மாற்றுகிறது. காதல், ரவுடி கும்பல்களின் பிரச்னைகள் என பல விஷயங்களில் சேட்டைகள் செய்கிறது. அந்த நாயினுடனான அவர்களின் வாழ்வுதான் இதன் கதைக்களம். திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘DisneyPlus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Padmini (மலையாளம்) – Netflix
‘Kunjiramayanam’, ‘The Priest’ படங்களின் எழுத்தாளர் தீபு பிரதீப் எழுத்தில் சென்னா ஹெக்டே இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், மடோனா செபாஸ்டியன், வின்சி அலோஷியஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Padmini’. காதல், காமெடி, டிராமா திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கவிஞராகவும், முழு நேர கல்லூரி ஆசிரியராகவும் இருக்கும் கதைநாயகன் ரமேஷன், தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள், காதல் அனுபவங்கள் என இலகுவான கதைக்களத்தைக் கொண்டது இத்திரைப்படம்.
Hidimbha (தெலுங்கு) – Aha
அனீல் கன்னேகண்டி இயக்கத்தில் அஸ்வின் பாபு, நந்திதா ஸ்வேதா, சாஹிதி அவஞ்சா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Hidimbha’. பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கை எடுத்து விசாரிக்கும் இரு காவல் அதிகாரிகள் அந்தத் தொடர் கொலைகளின் பின்னணியையும், அந்தக் கொலைகாரனையும் பிடித்தார்களா? என்பதுதான் இதன் கதைக்களம்.
விருவிருப்பான தெலுங்கு க்ரைம் திரில்லர் திரைப்படமானது இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Zara Hatke Zara Bachke (இந்தி) – Jio Cinema
திருமணமான தம்பதிகள், அவர்கள் வீட்டிற்குத் தெரியாமல் விவாகரத்து பெற முயற்சிக்கின்றனர். ஆனால், இவர்களின் ரகசியமான இந்தத் திட்டம் ஒரு கட்டத்தில் அவர்களின் வீட்டிற்குத் தெரிந்துவிடுகிறது. அதன்பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை. சீரியஸான உறவுச் சிக்கல்களை என்டர்டெயினிங்காக கமெடி ஜானரில் எடுத்துள்ளார் இயக்குநர் லக்ஷ்மன் உடேகர். விக்கி கௌஷல், சாரா அலிகான், இனாமுல்ஹக் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Super Mario Bros. Movie (ஆங்கிலம்) – Jio Cinema
இயக்குநர்கள் ஆரோன் ஹார்வத், மைக்கேல் ஜெலினிக் இயக்கத்தில் கிறிஸ் பிராட், அன்யா டெய்லர்-ஜாய், சார்லி டே ஆகியோர் பங்களிப்பில் வெளியாகும் ஆங்கில மொழி திரைப்படம் ‘The Super Mario Bros’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இப்படம் தற்போது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Fabelmans (ஆங்கில) – SonyLIV
‘Schindler’s List’, ‘Saving Private Ryan’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் மைக்கேல் வில்லியம்ஸ், கேப்ரியல் லாபெல், பால் டானோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் ‘The Fabelmans’.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் வளரும் ஒரு சிறுவன், சிறுவயதிலிருந்தே சினிமாக்களைப் பார்த்து திரைப்படம் இயக்குநராகும் கனவுகளுடன் வளர்கிறான். ‘The Greatest Show on Earth’ படம் அவளுள் தாக்கத்தை ஏற்படுத்த தன் அம்மாவின் துணையுடன் இயக்குநாரும் கனவை நோக்கிப் பயணித்து சினிமாவின் முக்கியத்துவத்தையும், உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அதன் ஆற்றலையும் புரிந்துகொள்ளுவதுதான் இதன் கதைக்களம்.
பல்வேறு விருதுகளை வென்ற இத்திரைப்படம் தற்போது ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Broker (Korean) – SonyLIV
ஒரு இளம் தாய் குடும்ப கஷ்டங்களால் தன் குழந்தையைக் எங்காவது விட்டுவிடாம் என்று நினைக்கிறார். அதற்காக அக்குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டுவிட தன் குடும்பத்துடன் வீட்டைவிட்டு தொலைதூரம் பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் அந்தத் தாயின் மனதில் ஏற்படும் மன மாற்றங்கள் இதன் கதைக்களம்.
Hirokazu Koreeda இயக்கத்தில் Song Kang-ho, Gang Dong-won, Bae Doona நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.