![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691845694_NTLRG_20230812150726517853.jpg)
சந்திரமுகி 2- தமிழ்ப் படத்தில் வெளியான தெலுங்குப் பாடல்
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முதல் சிங்கிளாக நேற்று 'ஸ்வாகதாஞ்சலி' என்ற பாடலை வெளியிட்டார்கள்.
சந்திரமுகி தோற்றத்தில் இருக்கும் கங்கனாவின் நடனப் பாடலாக இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. முதல் பாகத்தில் இடம் பெற்ற 'ரா ரா…' தெலுங்குப் பாடல் போலவே இப்பாடலையும் தெலுங்குப் பாடலாக உருவாக்கி அதை 'சந்திரமுகி 2 – தமிழ்' எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
அப்படியென்றால் 'தெலுங்கு சந்திரமுகி 2' வில் அது தமிழ்ப் பாடலாக இடம் பெறும். அந்தப் பாடல் எங்கே ? என ரசிகர்கள் கேட்கிறார்கள். ஆனால், படக்குழு வேறு எந்த மொழியிலும் இந்தப் பாடலை வெளியிடவில்லை.