Suspend judge arrest enforcement department action | சஸ்பெண்ட் நீதிபதி கைது அமலாக்க துறை அதிரடி

புதுடில்லி:லஞ்ச வழக்கில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட நீதிபதியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடில்லி பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதிர் பர்மார். இவர் மீது, ஊழல் தடுப்பு போலீசார், ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம் சுதிர் பர்மரை ‘சஸ்பெண்ட்’ செய்தது.

இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சுதிர் பர்மரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இதே வழக்கில் பர்மரின் மருமகன் அஜய் பர்மர், விளம்பர நிறுவன உரிமையாளர்கள் பசந்த் பன்சால் மற்றும் பங்கஜ் பன்சால், ரியல் எஸ்டேட் உரிமையாளர் லலித் கோயல் ஆகியோர் அமலாக்கத் துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், சுதிர் பர்மர், ரூப் குமார் பன்சால், அவரது சகோதரர் பசந்த் பன்சால் மற்றும் லலித் கோயல் ஆகியோர் மீதான வழக்குகளில், நீதிபதி சுதிர் பர்மர் சாதகமாக செயல்பட்டதாக, ஊழல் தடுப்பு போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.