இந்தியாவின் 75வது சுந்திர தின விழா கொண்டாட்டம் இன்னும் 3 நாட்களில் கொண்டாட்டப்பட இருக்கிறது. இதனையொட்டி வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அதிரடியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 12 முதல் 18 வரை, Vi வாடிக்கையாளர்கள் நம்பமுடியாத டீல்களை பெறலாம். மேலும், Vi app-ல் ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் குறிப்பிடத்தக்க வெகுமதிகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
Vi சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ரூ. 199க்கு மேல் உள்ள அனைத்து அன்லிமிடெட் டேட்டா ரீசார்ஜ்களிலும் 50ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா பலனை Vi வழங்குகிறது. மேலும், Vi வாடிக்கையாளர்கள் ரூ.50 மற்றும் ரூ.75 உடனடி தள்ளுபடிகளை ரூ.1449 மற்றும் ரூ.3099 ரீசார்ஜ் திட்டங்களில் பெறலாம். இந்த கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகத்தை சேர்க்கும் வகையில், Vi ஆப்பில் பிரத்தியேகமாக “ஸ்பின் தி வீல்” போட்டியும் நடத்தப்படும்.
இந்த போட்டியின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மணி நேரமும் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் உறுதி செய்யப்படுவார். அவர் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் ரூ.3099 மதிப்புள்ள ஒரு இலவச ரீசார்ஜ் பேக்கை வெல்வார் என்று Vi தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. “போட்டியானது கூடுதல் வெகுமதிகளுடன் வருகிறது. இதில் 1ஜிபி அல்லது 2ஜிபி கூடுதல் டேட்டா, SonyLivக்கான சந்தா மற்றும் பிற, Vi உடன் வெற்றி பெற பல வாய்ப்புகளை அனுபவிக்கலாம். மேலே உள்ள சலுகைகள் பிரத்தியேகமாக Vi App இல் மட்டுமே கிடைக்கும்.
ஜியோ சலுகைகள்
ரிலையன்ஸ் ஜியோ 2023 சுதந்திர தினத்திற்கான சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சுதந்திர தினம் 2023 ஆஃபர் என பெயரிடப்பட்ட இந்த விளம்பரமானது ரூ.2,999 வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்த ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த புதிய சலுகையின் கீழ், பங்கேற்பாளர்கள் ரூ.249 மற்றும் அதற்கு மேல் உள்ள Swiggy ஆர்டர்களில் ரூ.100 சலுகை உண்டு. மேலும், யாத்ரா பிளாட்பார்ம் மூலம் செய்யப்படும் விமான முன்பதிவுகளில் ரூ.1,500 வரை சேமிக்க முடியும். யாத்ராவில் உள்நாட்டு ஹோட்டல் முன்பதிவுகளுக்கு, பயனர்கள் தாராளமாக 15% தள்ளுபடியைப் பெறலாம். அதாவது, ரூ. 4,000 வரை.
கூடுதலாக, Ajio வழங்கும் ஆர்டர்களுக்கு ரூ.200 விலைக் குறைப்பு உள்ளது. ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தயாரிப்புகளுக்கு செல்லுபடியாகும். 999 ரூபாய்க்கு அதிகமான ஆர்டர்களுக்கு 20% தள்ளுபடியும், Netmeds-ல் ஷாப்பிங் செய்யும் போது NMS Supercash சேர்க்கப்படும். இறுதியாக, பங்கேற்பாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஷாப்பிங் செய்யும்போது குறிப்பிட்ட ஆடியோ கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் 10% விலைக் குறைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.