![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691941813_NTLRG_20230813121432055186.jpg)
அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு! நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட கியூட் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
கடந்த 2022ம் ஆண்டு நயன்தாராவுடன் திருமணம் நடைபெற்றதிலிருந்து தொடர்ந்து தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அதையடுத்து தங்களது இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் பதிவிடும் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது நயன்தாராவுடன் தான் பேசிக் கொண்டிருக்கும் ஒரு க்யூட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதோடு, அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு அமைவது அழகு. அதிசயம் அற்புதம் அதுவே என்று ஒரு கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.