தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இதுதவிர மாணவர்களின் கற்றலை உறுதி செய்யும் வகையில் பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு, புத்தகப் பை, காலணி, கலர் பென்சில்கள், வரைபடங்கள், வடிவியல் பெட்டிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
காலை சிற்றுண்டி திட்டம்சமீபத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு பள்ளிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமல்படுத்தி மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியது. மேலும் அரசு பள்ளிகளில் படித்து விட்டு உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
அமுதவல்லி ஐஏஎஸ் கடிதம்இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் கூடுதல் கல்வி அலுவலர், அனைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்களுக்கு சமூக நல ஆணையர் அமுதவல்லி ஐஏஎஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி குழந்தைகளுக்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும்.
இனிப்பு பொங்கல் அறிவிப்புகுழந்தைகள் மையங்கள் அல்லது சத்துணவு மையங்களில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு தினசரி சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் இனிப்பு பொங்கலுக்கு அரிசியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை சத்துணவு அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இதற்கான செலவை உணவூட்ட செலவில் இருந்து எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு முடிவுநடப்பு கல்வியாண்டில் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போது பள்ளிகள் திறக்கப்படவில்லை. கோடை விடுமுறை முடிந்து சற்று தாமதமாகவே திறக்கப்பட்டன. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டிற்கு கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி ஏற்பாடுஇதன் ஒருபகுதியாக ஆகஸ்ட் 14ஆம் தேதி (National Social Security Day) அன்று இனிப்பு பொங்கல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து சத்துணவு மையங்களிலும் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகள் இனிப்பு பொங்கல் பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இணை செயல்பாடுகள்சமீபத்தில் கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதில், இலக்கிய மன்றம், வினாடி – வினா மன்றம், வானவில் மன்றம், சிறார் திரைப்படம், வட்ட, மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிகழ்வுகள், பிற மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது.