செந்தில் பாலாஜி சொன்ன ஒரே ஒரு வார்த்தை.. கொத்தாக மாட்டிய அசோக் குமார்.. எல்லாமே "மாஸ்டர் பிளான்"

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் முடிவடைந்த ஒரே நாளில் அவரது தம்பி அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்திருக்கும் நிலையில், இதற்கு பின்னால் மிகப்பெரிய ‘மாஸ்டர் ப்ளான்’ இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறிய விஷயங்களும் தெரியவந்திருக்கின்றன.

அமலாக்கத்துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்தது? இத்தனை மாதங்களாக கைது செய்யப்பட முடியாத செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை தற்போது ஒரே நாளில் அமலாக்கத்துறை கைது செய்தது எப்படி?

விடிய விடிய நடந்த விசாரணையில் செந்தில் பாலாஜி சொன்ன விஷயங்கள் என்ன? என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. கடந்த 7-ம் தேதி இரவு புழல் சிறையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலக்திற்கு செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். அப்போது இரவு 9.30 மணி. அவர் தங்குவதற்காக ஏசி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“என்னால முடியல சார்”:
பின்னர் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகினர். அவரிடம் சில கேள்விகளையும் கேட்டுள்ளனர். அதற்கு செந்தில் பாலாஜி, “என்னால முடியல சார். தூக்கம் வருது. மாத்திரை போட்டுட்டு நான் தூங்கணும்” எனக் கூறியுள்ளார். முதல் நாள் என்பதாலும், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாலும் அன்று அவரை ஃப்ரீயாக அதிகாரிகள் விட்டுவிட்டனர். இதையடுத்து, அடுத்த நாள் காலை டிபன் முடிந்து தயாராக இருந்த செந்தில் பாலாஜியிடம் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள் அதிகாரிகள்.

“எனக்கு நியாபகம் இல்லை”:
அப்போது அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி பணப்பவரிர்த்தனை உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி அமலாக்கத்துறையினர் கேள்வியெழுப்பினர். அதற்கு பெரும்பாலான கேள்விகளுக்கு “எனக்கு தெரியாது.. எனக்கு நியாபகம் இல்லை” என்றே செந்தில் பாலாஜி கூறியதாக தெரிகிறது. மேலும், பல கேள்விகளுக்கு “எனக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்” எனவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதனால் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சற்று தங்கள் பேச்சு பாணியை மாற்றினர்.

“எல்லாம் அவனுக்குதான் தெரியும்”: “
இதுவரை கேட்டதெல்லாம் சம்பந்தம் இல்லாத கேள்வியாகவே இருக்கட்டும். உங்களுக்கும் உங்க தம்பி அசோக் குமாருக்கும் சம்பந்தம் இருக்குல்ல. இப்போ சொல்லுங்க. அசோக் குமார் கட்டி வரும் வீட்டின் நிலத்தை வாங்கியது எப்படி..? 30 கோடி ரூபாய் மார்க்கெட் வேல்யூ இருக்குற நிலத்தை அசோக்கின் மாமியார் 10 லட்சத்துக்கு எப்படி வாங்க முடிந்தது? உங்கள் செல்வாக்கு இல்லாம இது நடந்திருக்க வாய்ப்பில்லையே” என கொக்கி போட்டனர் அதிகாரிகள். இந்தக் கேள்வியை எப்படி சமாளிப்பது எனத் தெரியாத செந்தில் பாலாஜி, “எல்லாம் அசோக் குமாருக்குதான் தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.

“மாஸ்டர் ப்ளான்”:
இதுபோல பல கேள்விகளுக்கும் “எல்லாம் தம்பிக்குதான் தெரியும்” என செந்தில் பாலாஜி கூறினாராம். உண்மையில் இந்த வார்த்தைக்காக தான் அமலாக்கத்துறையினர் காத்துக் கொண்டிருந்தனர். ஏனெனில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாலும் அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படவில்லை. இதனால் ஒரு லெவலுக்கு மேலே போய் அவரிடம் விசாரிக்க முடியாது. மேலும், அவருக்கு பைபாஸ் சிகிச்சையும் செய்யப்பட்டிருப்பதால் மிகவும் கவனமாக அவரை கையாள வேண்டியது அவசியம். எனவே, அவர் வாயில் இருந்தே அசோக் குமாரின் பெயரை வரவழைத்து அவருக்கு கிடுக்கிப்பிடி போடுவதுதான் அமலாக்கத்துறையின் ப்ளானாக இருந்துள்ளது.

ரேடாரில் அசோக் குமார்:
இன்னும் சொல்லப்போனால் கடந்த 3 வாரங்களாகவே அசோக் குமார் எங்கு இருக்கிறார்.. என்ன செய்கிறார்.. யாரிடம் பேசுகிறார் என அனைத்தையும் தங்கள் ரேடாருக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்டு வந்துவிட்டனர். செந்தில் பாலாஜியிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுவிட்டு அசோக் குமாரை கைது செய்தால் தான், சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி அவர் தப்பிக்க முடியாது என வெயிட்டிங்கில் இருந்துள்ளனர் இ.டி. அதிகாரிகள். தற்போது தங்களுக்க தேவையான வாக்குமூலம் கிடைத்ததுமே அசோக் குமாரை தட்டி தூக்கியுள்ளனர். அசோக் குமாரிடம் நடைபெறும் “விசாரணை” தங்களின் வழக்கமான பாணியில் இருக்கும் எனக் கூறுகின்றனர் அமலாக்கத்துறை வட்டாரங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.