பெங்களூரு லால் பாக் மலர் கண்காட்சி: கிளாஸ் ஹவுஸில் 8 லட்சம் பூக்கள்… இது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?

பெங்களூரு லால் பாக் என்றதும் மலர் கண்காட்சி தான் பலருக்கும் நினைவில் தோன்றும். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை ஒட்டி 12 நாட்களுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும். பல லட்சம் பூக்களுடன் கண்கொள்ளா காட்சியாக பரந்து விரிந்திருக்கும். அங்குள்ள கிளாஸ் ஹவுஸில் பல்வேறு வடிவங்களை மலர்களால் உருவாக்கி ஆச்சரியத்தில் மூழ்கடிப்பர். நடப்பாண்டும் மலர் கண்காட்சி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

லால் பாக் மலர் கண்காட்சிவரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உடன் முடிவடைந்து விடும் என்பதால் பல்வேறு ஊர்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பெங்களூரு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதி வருகிறது. 7.5 லட்சம் பூக்களால் கர்நாடகா மாநில சட்டமன்றம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் மஞ்சள், பீச், கிரைசாந்திமம் ஆகிய பூக்கள் இடம்பெற்றுள்ளன. சத்யகிரஹா சவுதாவை ரோஜாக்கள், கிரைசாந்திமம் என 3 லட்சம் பூக்களால் உருவாக்கியுள்ளனர்.​பூக்கள் பராமரிப்புஇந்த பூக்கள் அனைத்தும் வாடி போய் விடாமல் இருக்கும் வகையில் உற்சாக வாசனை திரவியத்தை வெளிப்படுத்தக் கூடிய 600 எண்ணெய் வெளியிடும் கருவிகளை (Mist Diffuser) அமைத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு அனைத்து பூக்களையும் பராமரிக்க 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. பெங்களூருவில் பகல் நேர வெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பூக்களின் புத்துணர்ச்சியும் பாதிக்கப்படுகின்றன.
​ஏமாற்றிய பருவமழைவழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்கும். செப்டம்பரில் உச்சம் தொடும். ஆனால் கடந்த ஒருவாரமாக போதிய மழை பெய்யாததால் பூக்களை அதன் இயல்பு மாறாமல் பாதுகாக்க பெரும் சிரமத்தை ஊழியர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமின்றி கிளாஸ் ஹவுஸில் அதிகப்படியான மக்கள் வருகையால் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக காணப்படும்.கிளாஸ் ஹவுஸ் ஈரப்பதம்இதற்கிடையில் பெங்களூரு நகரின் இயல்பு வெப்பநிலை கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளது. எனவே லால் பாக் மலர் கண்காட்சியில் சுற்றிலும் ஈரப்பதம் நிறைந்திருக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக கிளாஸ் ஹவுஸில் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை நீர் துளிகளை வெளியேற்றும் வண்ணம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. முதல் 6 நாட்களில் பயன்படுத்திய பூக்களை அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.
டிக்கெட் வசூல்இதற்கான வேலையில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வியாழன் அன்று இரவு முழுவதும் ஈடுபட்டனர். கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3.3 லட்சம் பேர் பார்வையாளர்களாக வந்து சென்றுள்ளனர். தற்போது வரை லால் பாக் மலர் கண்காட்சியின் டிக்கெட் வசூல் 1.2 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. லால் பாக் மலர் கண்காட்சியை பார்வையிட பெங்களூரு நம்ம மெட்ரோ மூலம் வருகை புரியும் பார்வையாளர்களுக்கு பேப்பர் டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன.
பெங்களூரு மெட்ரோ ஏற்பாடுஎந்த ஒரு ரயில் நிலையத்தில் இருந்தும் லால் பாக் வருவதற்கு வெறும் 30 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இந்த சலுகை ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒருநாள் மட்டுமே செல்லுபடியாகும். அன்றைய தினம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பயணம் செய்யலாம். ஒருநாள் முழுவதும் அந்த டிக்கெட் செல்லுபடியாகும் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.