ஷிகர் தவான் முதல் புவனேஷ்வர் குமார் வரை: இனி இந்திய அணியில் பார்க்க முடியாமல் போகும் 5 வீரர்கள்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இப்போது மேற்கிந்தியத் தீவுகளில் உள்ளது. அங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு, ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை நிர்ணயிக்கும் இன்றைய போட்டியில் களம் காண உள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சீனியர் பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. அந்தவகையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இவர்களின் வருகையால் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் 5 வீரர்கள் பட்டியலை பார்க்கலாம்.

இந்த 5 வீரர்களுக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லை

ஷிகர் தவான்: 

இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ஷிகர் தவான். அவர் இந்திய அணிக்காக 167 போட்டிகளில் விளையாடி மொத்தம் 6793 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கா அதிக ரன்கள் எடுத்தவர்களில் 10வது இடத்தில் உள்ளார் ஷிகர் தவான். அவர் 2015 மற்றும் 2019  ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆனால் இப்போது இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. 

கடைசியாக டிசம்பர் 10, 2022 அன்று சட்டோகிராமில் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அவர் விளையாடியதே கடைசி போட்டியாகும். ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியிலும் அவர் இடம்பெறவில்லை. இதனால் ஓய்வு அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.