1989 ஜெ., சம்பவம்… நிர்மலா சீதாராமன் லண்டனில், எடப்பாடி பழனிசாமி மூலையில்… திருச்சி சிவா பளீச்!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்

எம்.பி

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கவலையில்லை என்று குற்றம்சாட்டினார். மணிப்பூர் கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்த நாடும் தலைகுனிந்து நிற்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

ஜெயலலிதா மரணத்தை முன்பே கணித்த கலைஞர்
மணிப்பூர் விவகாரம்

பொறுப்பற்ற முறையில் பிரதமர் மோடி செயல்படுவதாக குறிப்பிட்டார். மறுபுறம் எந்த விவாதமும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். திமுக மீது கடும் விமர்சனங்களை பிரதமரும், உள்துறை அமைச்சரும் முன்வைத்தது பற்றி பேசுகையில், அவர்களுக்கு இங்கு தான் அச்சமுள்ளது. தமிழகத்தில் அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியவில்லை என்று சுட்டிக் காட்டினார்.

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட நிகழ்வு

1989ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மானபங்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். இதையே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சுட்டிக் காட்டி திமுகவை விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கையில், இரண்டு விஷயங்கள். நிர்மலா சீதாராமன் திருமணமாகி லண்டன் சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியது 1991ஆம் ஆண்டு.

எங்கே இருந்தார்

இங்கு நடந்த எதையும் நேரடியாக பார்க்க வாய்ப்பில்லை. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு செல்லும் வரையில் எடப்பாடி பழனிசாமி என்ற அமைச்சர் இருந்தார் என யாருக்காவது தெரியுமா? ஜெயலலிதா உடனிருந்த திருநாவுக்கரசரிடம் கேட்டால் சரியாக இருக்கும். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனிடம் கேட்டால் சரியாக இருக்கும். எங்கோ ஒரு மூலையில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது வளர்ந்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக மாறியுள்ளார்.

இந்தியா கூட்டணி

எல்லாம் தெரிந்ததை போல பேசுகிறார். இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல். இன்னும் 6 மாத காலத்திற்கு தான். அதன்பிறகு மீண்டும் நாங்கள் தான் வருவோம் என்று நம்பிக்கையுடன் திருச்சி சிவா தெரிவித்தார். நீட் விவகாரத்தில் ஒப்புதல் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பற்றி கேள்விக்கு, அவர் அப்படித்தானே சொல்வார்.

நீட் தேர்விற்கு விலக்கு

இன்று, நேற்றா சொல்கிறார். ஆரம்பத்தில் இருந்து மத்திய அரசின் குரலாக தான் ஒலிக்கிறார். மத்தியில் ஆட்சி மாறப் போகிறது. அப்போது எல்லாம் மாறும். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பணக்கார பிள்ளைகள் நீட் தேர்விற்கு பயிற்சி பெறுகின்றனர். ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் எங்கு செல்வார்கள்?

இந்த தேர்வு இல்லாமல் தகுதி பெற்ற மருத்துவர்கள் தமிழகம் மட்டுமல்ல, இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றனர். எனவே ஆட்சி மாறுவது தான் ஒரே தீர்வு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். அப்போது நீட் விலக்கு கட்டாயம் கிடைக்கும் என்று திருச்சி சிவா தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.