டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
2023 TVS Jupiter
110சிசி ஜூபிடர் ஸ்கூட்டர் வரிசையில் ஜூபிடர் SMW, Base, ZX, ZX Drum SmartXonnect, ZX Disc, ZX Disc SmartXonnect மற்றும் Classic என மொத்தமாக 7 விதமான வகைகளிலும் பொதுவாக 109.7cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 7.77bhp பவர் மற்றும் 5,550rpm-ல் 8.8Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
குறைந்த விலை SMW அதாவது சீட் மெட்டல் வீல் பெற்ற மாடலில் ஹாலஜ்ன் ஹெட்லைட் வழங்கப்பட்டு மற்ற மாடல்களில் எல்இடி ஹெட்லைட் ஆனது இடம்பெற்றுள்ளது. பொதுவாக 7 வேரியண்டுகளும் பல்வேறு சிறிய வித்தியாசங்களுடன் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இருவிதமான ஆப்ஷனை கொண்டிருப்பதுடன் கூடுதலாக SmartXonnect வசதி மூலம் ப்ளூடூத் இணைப்பின் மூலம் பல்வேறு அம்சங்களை பெறுகின்றது.
இந்த ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி மூலம் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறும் ஜூபிடர் புளூடூத் வாயிலாக இயக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். இது TVS Connect மொபைல் செயலி வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது.
டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், குரல் உதவி, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு எச்சரிக்கைகள். மேலும், டிவிஎஸ் இந்த வேரியண்டில் USB மொபைல் சார்ஜிங் போர்ட் பொருத்தியுள்ளது.
முன்புறத்தில் 130மிமீ டிரம் அல்லது 220 மிமீ டிஸ்க் பெற்ற ஒரு சில வேரியண்டுகள் உட்பட பின்புறத்தில் பொதுவாக 130 மிமீ டிரம் வழங்கப்பட்டு (SBT) கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.
6 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 21 லிட்டர் ஸ்டோரேஜ் பெற்ற டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் பரிமாணங்கள் 1834 மிமீ நீளம், 678 மிமீ அகலம் மற்றும் 1286 mm உயரம் பெற்று, 1275 மிமீ வீல்பேஸ் கொண்டதாக உள்ளது. 163 மிமீ வீல்பேஸ் மற்றும் 107 முதல் 109 கிலோ வரை எடை வேரியண்டை பொறுத்து மாறுபடுகின்றது. டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஸ்கூட்டரில் இரண்டு பக்கமும் 90/90-12 54J டயர் உள்ளது.
டாப் ஜூபிடர் கிளாசிக் மாடலில் ரெட்ரோ ஸ்டைலை பெற்று ஓக் பேனல் , முழு குரோம் நிறத்தை பெற்ற சைட் மிரர் , க்ரோம் பேக்ரெஸ்ட், ஸ்மார்ட் யூஎஸ்பி சார்ஜர் போன்றவற்றுடன் கிடைக்கின்றது.
2023 டிவிஎஸ் ஜூபிடர் விலை பட்டியல்
- Jupiter SMW ₹ 78 618
- Base ₹ 81,683
- ZX ₹ 86,158
- ZX Drum SmartXonnect ₹ 88,493
- ZX Disc ₹ 90,238
- ZX Disc SmartXonnect ₹ 93,013
- Classic ₹ 93,673
(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
டிவிஎஸ் ஜூபிடர் 110 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 53.5 x 48.8 mm |
Displacement (cc) | 109.7 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 7.7 hp (5.8 Kw) at 7,500 rpm |
அதிகபட்ச டார்க் | 8.8 Nm at 5,500 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங் |
பிரேக் | |
முன்புறம் | டிரம் 130 mm/220mm டிஸ்க் |
பின்புறம் | டிரம் 130 mm (with SBT) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய்/SMW |
முன்புற டயர் | 90/90-12 54J ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/90-12 54J ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-4Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1834 mm |
அகலம் | 678 mm |
உயரம் | 1286 mm |
வீல்பேஸ் | 1275 mm |
இருக்கை உயரம் | 765 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 163 mm |
எரிபொருள் கொள்ளளவு | 6 litres |
எடை (Kerb) | 107 kg (Drum) – 109 kg (Classic) |
டிவிஎஸ் ஜூபிடர் 110 நிறங்கள்
ஜூபிடர் 110 மாடல் வெள்ளை, நீலம், கிரே, கருப்பு, சிவப்பு, பிரவுன், பர்பிள், ஆலிவ் கோல்டு, காப்பர் பிரான்ஸ், ராயல் வைன் என பலதரபப்பட்ட வேரியண்ட் வாரியாக மொத்தம் 17 நிறங்கள் உள்ளன.
2023 TVS Jupiter on-Road Price Tamil Nadu
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Jupiter SMW ₹ 93,136
- Base ₹ 97,256
- ZX ₹ 1,02,175
- ZX Drum SmartXonnect ₹ 1,04,740
- ZX Disc ₹ 1,06,658
- ZX Disc SmartXonnect ₹ 1,09,708
- Classic ₹ 1,10,434
(All Price On-road Tamil Nadu)
- SMW -₹ 87,625
- Base₹ 91,299
- ZX ₹ 95,860
- ZX Drum SmartXonnect ₹ 98,240
- ZX Disc₹ 1,00,018
- ZX Disc SmartXonnect₹ 1,02,846
- Classic ₹ 1,03,519
(All Price on-road Pondicherry)
2023 TVS Jupiter rivals
2023 டிவிஎஸ் ஜூபிடர் மாடலுக்கு போட்டியாக ஆக்டிவா, பிளெஷர் பிளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 110, டியோ 110 உட்பட இதுன் டாப் வேரியண்ட் விலை 125சிசி ஸ்கூட்டர் மாடல்களுக்கு இணையாக உள்ளது.
Faqs About TVS Jupiter
டிவிஎஸ் ஜூபிடர் என்ஜின் விபரம் ?
ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் 109.7cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 7.77bhp பவர் மற்றும் 5,550rpm-ல் 8.8Nm டார்க் வெளிப்படுத்தும்.
டிவிஎஸ் ஜூபிடர் மைலேஜ் எவ்வளவு ?
டிவிஎஸ் ஜூபிடர் மைலேஜ் லிட்டருக்கு 45 கிமீ வரை வழங்கும்.
2023 TVS Jupiter 110 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
டிவிஎஸ் ஜூபிடர் ஆன்-ரோடு விலை ரூ.93,136 முதல் ரூ.1,10,434 வரை ஆகும்.
2023 டிவிஎஸ் ஜூபிடர் போட்டியாளர்கள் ?
டிவிஎஸ் ஜூபிடர் மாடலுக்கு போட்டியாக ஆக்டிவா, பிளெஷர் பிளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் 110, டியோ 110 போன்றவை உள்ளன.
டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் சிறப்புகள் என்ன ?
ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள், இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது.
2023 TVS Jupiter Scooter Image Gallery