வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வாகனத்தில் சென்ற சீனப் பொறியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் நடக்கும் பணியில் ஏராளமான சீனர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியில் சீன முதலீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், உள்ளூர் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனக்கூறி அப்பகுதியில் போராட்டம் நடந்தது. அவ்வபோது, சீனர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பாதுகாப்பை பலப்படுத்தும்படி கூறியிருந்தது.
இந்நிலையில், குவாடர் துறைமுகத்தில் பணியை முடித்துக் கொண்டு, சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், வாகனம் சேதமடைந்தது. பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில் இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement