வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ஒலி இரைச்சல் மற்றும் ஒலி மாசுவை கட்டுப்படுத்த வி.ஐ.பி.,க்களின் வாகனங்களின் சைரன்களில் இனிமையான புல்லாங்குழல் தபேலா இசை ஒலிக்க செய்ய அரசு திட்டமிட்டு உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
![]() |
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கட்கரி கூறியதாவது: பல்வேறு துறைகளில் விஐபிக்களின் கலாசாரத்தை தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒலி மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைரன்களுக்குப் பதிலாக விஐபி வாகனங்களில் இனிமையான ஒலிகளை ஒலிக்கச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
விஐபியின் வாகனத்தில் சிகப்பு விளக்கை அணைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். விஐபி வாகனங்களில் சைரன்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளேன்.
![]() |
சைரன் ஒலிக்குப் பதிலாக புல்லாங்குழல், தபேலா மற்றும் ‘ஷாங்க்’ ஒலிகள் ஒலிக்கச்செய்துஒலி மாசுபாட்டிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், மேலும் சைரன்களின் ஒலிக்கு பதிலாக புல்லாங்குழல் மற்றும் தபேலா போன்ற இந்திய இசைக்கருவிகளி்ன் இனிமையான இசையை ஒலிக்க செய்யப்படும் என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement